Pages

Tuesday, March 19, 2013

a thosand flowers bloom

cathay பசிபிக் விமானம் 7.3.2013 அன்று சென்னை விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் கிளம்பியபோது உள்ளம் எல்லாம் ஒரு பிரகாசம். இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஆனந்தம்.முதல் குழந்தை மிமுத்தமிடும் போதும் முதல் காதல் சொல்லபப்டும் போதும் தோன்றும் உல்லாசம் என பல உணர்வுகளின் சங்கமம்.விமானம் தாதரை விட்டு வேனில் எழுந்த அந்த கணம் உடலில் ஒரு புல்லரிப்பு. அருகே மனைவியும் என் மூத்த சகோதரியும் அமர்ந்திருக்க என் இந்த புதிய முகம் அவர்களுக்குள் ஒரு ஆச்சரியம் தோற்றுவித்திருக்கும்/அந்த உணர்வு பரவச நிலை சற்றே தாலாட்ட கண் அசந்த நேரம் விமான ப ணி பெண்ணின் இனிய குரல் என்னை எழுப்பியது. நேரம் பார்க்க கடிகாரத்தின் கா ந்த முள் காலை 5.30 எனக் காட்டியது. எதற்காக இவ்வளவு காலை வேலையில் எழுப்பப்பட்டேன் என்று உணரும் முன்னமே சுடசுட பரிமாறப்பட்ட இட்லியும் , அது ஊறி திளைத்து இ ருந்த சாம்பாரின் மண மும் ,சேமிய உப்புமாவும்,அதன் துணை வந்த கா ர சட்னியும் , இவை எல்லாவற்றுக்கும் மேல் மண ம் பரப்பி வந்த coffee மனமும் ஒரு சேர, புலன்கள் அனைத்தும் எழுப்பி விட, அப்போது தான் அது காலை உணவு என்பதும் , பறந்து கொண்டிருக்கும் நாட்டின் நேரம் காலை 8 மணி என்பதும் ஒரு சேர நினைவுக்கு வந்தது. நல்ல வேளை , விமானம் புறப்படும் முன் நாங்கள் மூவரும் காலை கடன்களை நிறைவேற்றி இருந்ததால் அந்த உணவு அந்த அதி காலை வேளையில் ஒரு நல்ல துவக்கம் ஆக அமைந்தது . இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஹாங்காங் வந்து விடும் என்ற எண்ணம் மனதில் பட்டா ம் பூச்சி பறக்க விட்டது என்றால் மிகை இல்லை. அதற்கு முன்னர் எனது ஹாங்காங் பயணங்கள் எல்லாம் சிங்கப்பூர் அல்லது மலேசியா மூலமே இருந்தது என்பதால் அதிகாலை வேளை அங்கே இறங்கி, சற்றே அந்த விமான நிலையங்களின் அழகில் மனம் தோய்ந்து பின்னர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் ஹாங்காங் அடைவது வழக்கம் .ஆனால் இந்த மு றை எனது வயதான சகோதரி என்னுடன் வந்த காரணத்தால் நேராக சென்னை ஹாங்காங் பயணம் தரவு செய்தேன், மேலும் 5 மணி நேரத்தில் என் மகனை பார்த்து விட முடியும் என்ற எண்ணமும் இந்த தேர்வுக்கு கார ணம். இவற்றை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் விமானம் தரை இறங்க போகின்றது என்ற அறிவிப்பு செவியில் தேனாக பாய்ந்தது சரியாக ஹாங்காங் நேரம் 10/35 மணி அளவில் விமானம் தரை இறங்கியது ஆயிரம் தாமரை மொட்டுக்கள் என் மனதில் , ஒரு சேர பூத்து குலூங்கின!! (மீண்டும் பூக்கும் ).

Monday, March 18, 2013

ஹாங்காங் -மறு பார்வை

ஹாங்காங் -மறு பார்வை 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அந்த பூலோக சொர்க்கம் .ஆம் எனது ஹாங்காங் பயணம் பற்றிய குறிப்பு வரையச் சொன்னால் அந்த அனுபவம் ஒரு தெவிட்டாத பேரானந்தம் என்று சொல்ல வேண்டும். நகரங்கள் எல்லாம் நல்லவை தான் .அவற்றில் நமக்கு ஏற்படும் அனுபவங்களே .அவற்றை நல்லவை என்றும் அல்லவை என்றும் நம் மனதில் ஒரு பதிப்பை ஏற்படுத்துகின்றது என்று கூறுவார்கள் . அதை மனதில் வைத்து பார்க்கும் போது இந்த பூமி எனக்கு அளப்பரிய சந்தோஷ அலைகளை தோற்றுவித்தது.சிலரை நமக்கு பார்த்ததும் பிடிக்கும் .சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்.வேறு சிலரை பார்த்தாலே பிடிக்காது போய்விடும்.இதன் காரணங்களை ஆராய்வது மேலும் குழப்பத்தை உண்டாக்கும்.அது போல் ஹாங்காங் ஏன் எனக்கு பிடித்தது என்ற கேள்விக்கு பார்த்ததும் பிடித்த நகரம் எற்று மட்டுமே கூற முடியும். ஆனால் சற்றே ஆழ்ந்து சிந்திக்கும் போது பல காரணங்கள் தோன்றுகின்றன. முன்னம் என் ஹாங்காங் வாழ்க்கை(1997-2001) என் வேலை சார்ந்த சிறப்பினை எனக்கு அளித்ததினாலும்,என் மனது க்கு பிடித்த இலக்கிய கதவுகளை தரிசிக்க மீண்டும் வழி வகுத்ததனாலும் (இது இரண்டாவது காதல் ,முதல் காதல் களம் கொல்கத்தா ) என் ஆன்மிக அனுபவங்கள் சிலவற்றை மேலும் செம்மை படுத்திய தா லும் (நன்றி -திரு விஸ்வநாதன்) எனக்கு பிடித்தது என்ட்றா ல் ,இம்முறை (பிப் 2013)இந்த நகரம் மீண்டும் மீண்டும் என்னை ஒரு காந்தமாக இருந்து என்னை ஈர்த்தமைக்கு மூல காரணம் என் மகன். அவன் படிக்கும் படிப்பு சம்பந்தமாக அவன் ஹாங்காங் போய் சேர்ந்ததில் இருந்து கடந்த 3 வருடங்களாக கற்பனை செய்து வந்த இந்த பயணம் இப்போது நினைவாக மாறியது .ஆம் ஒவ்வொன்றும் ஒரு விதிப்படி நடக்கின்றன என்பது மீண்டுமிந்த பயணம் எனக்கு உணர்த்தியது. (தொடரும்)

Wednesday, February 20, 2013

anbulla kadhalikku!!

என் முகம் தெரியாத காதலிக்கு உன் முகம் மட்டுமே நினைக்கும் காதலன் எழுதும் மடல் காதல் தெரியாதவன் நான் காதலை எனக்கு ஊட்டியவள் நீ கவிதையின் சந்தம் ரசித்தவன் நான் காவிய முத்தம் காட்டியவள் நீ இயற்கை எழிலை ரசித்தவன் நான் உன்னை மட்டுமே ரசிக்க மாற்றியவள் நீ கரம் தொட அஞ்சியவன் நான் என் தோள்களே உன் ஊஞ்சல்கள் என்றவள் நீ நண்பர்களை நேசித்தவன் நான் நண்பர்களை விரோதி ஆக்கியவள் நீ நயமாக பேசுபவன் நான் பிறர் நலிவடைய பேசுபவள் நீ என் குரல் உயர்ந்தாலோ அது ஆணாதிக்கம் என் குரல் தாழ்ந்தாலோ அது ஆண்மைன்மை பிறன் குரல் உயர்ந்ததால் பரவசம் பிறன் குரல் தாழ்ந்தால் அது பெண்ணீயம் காதல் என்பதை நீ அறிவாயா கட்டி தழுவது காதல் அல்ல காயப்படுத்துவது காதல் அல்ல கரிசனம் கட்டுவது காதல் பெற்றோருக்கு பயப்படுவது காதல் அல்ல பெற்றோரையும் மாற்றுவது காதல் அடைந்து கொள்வது காதல் அல்ல அடைத்து வைப்பதும் காதல் அல்ல தூய மலரின் மணம் காதல் காலை சூரியனின் ஒளி காதல் தேகம் தொடும் தென்றல் காதல் தெய்வ தரிசனம் காதல் காதல் பொய் சொல்வதில்லை காதல் அலைக்கழிப்பதில்லை காதல் பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை காதல் இதயங்களை உடைப்பதில்லை உண்மை காதல் உருகும் ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைக்கும் நீ அழுதால் தான் அழும் நீ சிரித்தாள் தான் சிரிக்கும். ஆம், நான் உண்மை காதலின் சின்னம் நீ? என்றென்றும் அன்புடன் காதலை மதிக்க தெரிந்த ஒருவன் காதலை மிதிக்க தெரிந்த ஒருவளுக்கு எழுதும் இதய ஒலி. Intended to be published on valentine day, delayed due to a small surgery i had to undergo!!

KURINCHI MALAR

குறிஞ்சி மலர் சுமார் 50 வருடங்களுக்கு முன் குறிஞ்சி மலர் என்ற வார்த்தை எனக்கு முதல் முறை பரிச்சயம் ஆனது. திரு நா பார்த்த சாரதி அவர்கள் கல்கியில் எழுதிய 'குறிஞ்சி மலர் ' என்ற தொடர் கதை என் வாழ்வின் பல பரிமாணங்களை எனக்கு புரிய முதல் விதை. குறிஞ்சி மலர் நாயகன் மற்றும் நாயகியான அரவிந்தனும் பூரணியும் ஒரு நல்ல ஆ ணுக்கும் ஒரு அன்பான பெண்ணுக்கும் நல்ல ஆதர்சனங்கள் . எம் முதல் காதல் குறிஞ்சி மலரின் மேல் ஏற்பட்டது இந்த வயதில் தான். பின்னர் ஒரு நாள் திரு நா பார்த்தசாரதி அவர்கள் கல்கத்தா தமிழ் மன்றத்துக்கு வருகை தந்த போது , அவர்களிடம் செலவழித்த அற்புத நிமிடங்கள் என் குறிஞ்சி காதல் பல மடங்கு அதிகமாக கரணம் ஆக அமைந்தது . 12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் இந்த மலரை நான் பார்க்க சுமார் 20 வருடங்கள் காக்க நேர்ந்தது.என் திருமணத்துக்கு பின் கொடைக்கானல் சென்ற போது குறிஞ்சி ஆண்டவர் கோயிலும்,குறிஞ்சி பூக்காடும் எனக்கு காணக் கிடைத்தது.அந்த பரவச உணர்வை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .அனுபவம் என்பது தனி மனித உணர்வு வெளிப்பாடு என்று நான் உணர்ந்தது அங்கு தான் . 12 என்பதற்கு ஒரு தனி மகிமை உண்டு .கும்பகோணம் மகா மகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை தான்.ஒரு வருடம் என்பது 12 மாதங்கள் கொண்டது.கும்ப மேளா வருவதும் 12 வருடத்துக்கு ஒரு முறை தான் .ஒரு நாளின் மணிக் கணக்கை 12 மணி என்ற அளவில் தான் பகிர்த்து காண்கின்றோம். குறிஞ்சி மலரும் 12 வருடத்துக்கு ஒரு முறை காணக் கிடைக்கும் அதிசயம் . என் எண்ணங்கள் இப்போது ஏன் இந்த 12 என்ற எண்ணில் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு விடை என் ஹாங்காங் பயணத்தில் உள்ளது ஆம் .கடந்த 2001 டிசம்பர் மாதம் ஹாங்காங் மண்ணிடம் விடை பெற்று இந்தியா திரும்பியபோது மீண்டும் ஹாங்காங் மண்ணை மிதிப்போம் என்று நிச்சயமாக எண்ணவில்லை, வாழ்க்கை என்பது ஒரு வட்டம் , அதில் ஒரு சில அனுபவங்கள் மீண்டும் மீண்டும் நம்மை நம்மை வந்து அடைகின்றன என்பது, என் மகன் அவனுடைய படிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, ஹாங்காங் சென்றபோது எனக்கு புலனாகியது.அவனை சந்திக்கும் எண்ணம் ஒரு காரணியாக இருந்து என்னை இயக்க, கடந்த இரண்டு வருடங்களாக உள்ளே இருந்த இந்த விதை, இப்போது முளை விட, குருவின் அருளும் குருநாதனின் அழைப்பும் ஒரு சேர ,யூனுஸ் பாயின் அன்பு இல்லம் வரவேற்புடன் காத்திருக்க , பிரசாத், ராம் போன்ற எண்ணற்ற நண்பர்களின் அன்பு நெஞ்சங்கள் காந்தமாக எனை இழுக்க 12 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஹாங்காங் மண்ணை தொடும் அந்த நன்நாளை முதல்முதல் குறிஞ்சி மலரை ஸ்பரிசித்த அந்த கணத்தில் நெஞ்சத்தில் எழுந்த பரவசத்துடனும்,ஆவலுடனும் எதிர் பார்த்து காத்து இருக்கின்றேன், அனைவருக்கும் அன்புடன் சம்பத் குமார்

Sunday, December 16, 2012

WELCOME THOUGHTS TO MY SON

திரும்பி பார்கிறேன் விரும்பி பார்கிறேன் ஆம் என் அன்பு மகன் எங்களிடம் சென்னைஇல் இருந்து விடை பெற்று சென்ற நாள் முதல் (17/10/2010) இன்று வரை நடந்த நிகழ்வுகள் (இரண்டு வருட முடிவில்)அவை ஏற்படுத்திய சலனங்கள், அவை கற்று கொடுத்த அனுபவங்கள் என்று வரிசை படுத்தி போகலாம் .எல்லா அனுபவங்களுமே நல்லவை தாம் , அவற்றை எடுத்து கொள்ளும் மனப்பாங்கு மட்டுமே வேறு படுகின்றது என்று "யாரோ" கூறியது நினைவில் வருகின்றது. தசரதன் தன் பிள்ளை ராமனை விட்டு பிரிந்த போது அவர் அடைந்த மன வேதனைகள் பற்றி பல முறை பல வேளைகளில் , பல அரங்குகளில் , பல்வேறு வயதினில் கேட்டாகிவிட்டது.என் தந்தை என்னை விட்டு இருக்க வேண்டிய நேரங்களில், அதிகம் பேசாத அவர் தன் பாசம் பற்றிய உணர்வுகளை வெளிகாட்டிய விதமும் அனுபவித்து ஆகிவிட்டது.தந்தை மகன் என்றாலே ஆடும் புலியுமாக இருந்த உறவு விரிசல்களும் பார்த்தாகிவிட்டது. முதலில் நான் தசரதன் என்றோ என் மகன் ராமன் என்றோ நான் சொல்வதாக அர்த்த படுத்தி கொள்ள வேண்டாம் .தசரதனிடம் இருந்து நான் ஆரம்பித்த காரணம் எவ்வளவு காலங்கள் ஆனாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை என்று காட்டத் தான்.இன்று கணினி யுகம்.நினைத்தால் தொடர்பு கொண்டு பேசவோ. அல்லது(சற்றே பண வசதி கூடுதல் ஆக இருந்தால்) நேரிலே கூட விமானம் ஏறி வந்து பார்க்க வோ முடியும்.ஆயினும் பிரிவுகளும் அவை கொடுக்கும் வேதனைகளும் காலம் காலமாக அப்படியே தான் இருக்கின்றன.இன்னும் பார்த்தால் நான் சுட்டி காட்டிய சில விரிசல்கள் கூட பாசத்தின் மிகுதியால் அவற்றை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் போனதால் இருக்கலாம்..மன்னிக்கவும், எண்ணங்கள் தடம் புரண்டு விட்டன...மீண்டும் ஒருமை படுத்தி பார்க்கலாம் . மேற்சொன்னவை வைத்து நான் மிகவும் துயரத்தில் உள்ளதாக அர்த்தம் இல்லை.வலி இல்லை என்று சொன்னால் அது பொய்.அந்த வலி யை துடைக்கும் மந்திரம் என் மகனிடம் உள்ளது என்பது தான் உண்மை.நங்கள் இருவரும் ஒரு தந்தை மகனாக இருக்கும் நிலை தாண்டி நல்ல நண்பர்கள் என்ற நிலைக்கு எங்கள் உறவை வளர்த்து கொண்டதால் ஏற்பட்ட பகிர்தலும் புரிதலும் இந்த கால தூர பரிணாமங்களை ஒரளவு எதிர் கொள்ள எங்களை தயார் செய்துள்ளது. டிசெம்பர் 17,2010 அவன் விடை பெற்ற நாள்.2011 , ஜூன் மகளின் திருமணம் காரணமாக அவன் வந்து சென்ற நாட்கள் என் மனோ பலம் கூட்டிய நாட்கள்.மே 2012 தன் சகோதரியின் ஆசை மகனை அணைத்து உச்சி முகர அவன் வந்து சென்ற நாட்கள் நான் இல்லாத இடத்தை (வேலை நிமித்தம் நான் வெளியில் இருந்த நாட்கள் இவை)அவன் இட்டு நிரப்பிய நாட்கள். இப்படி பல முறைகளில் அவன் தன் வருகையால் வசந்தம் ஏற்படுத்தி சென்றாலும் , அவன் வந்தவுடனேயே , அவன் திரும்பி போகவேண்டும் என்ற நிலையே அவனின் முழு நேர அண்மையை முழுதும் ரசிக்க விடாமல் செய்து விடுவது வழக்கம் .மனம் என்ற குதிரை வசப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்திய நாட்கள் இவை .இந்த இடர் பாடுகளும் ,மன உளைச்சல்களும்,இவற்றுக்கு மேல் அவன் எடுத்து கொண்ட ஆராய்ச்சியினை குறிப்பிட்ட காலகெடுவில் , ஒரு அந்நிய நாட்டில், ஒரு அவ்வளவு இணக்கம் இல்லாத சூழலில் முடிக்க வேண்டிய நிர்பந்தங்களும் அவனுக்கு அதிகமாகவே உண்டு.அப்படிபட்ட நேரங்களில் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து கொண்டு, எந்த விதத்திலும் அவனுக்கு உதவ முடியாத சுய இரக்கம் எனக்கு மிக உண்டு. ஆனால் அதையும் மீறி அவன் முயற்சிகளிலும் ,அவன் ஆளுமையிலும் அவன் சுய நம்பிக்கையிலும், இவை எல்லாம் அவனுக்கு வெற்றி கொடுத்து அவனை எங்களிடம் கொண்டு சேர்க்கும் நாள் அதிகத் தூரம் இல்லை என்ற மனோ திடமும் எனக்கு உண்டு . அவன் தனது மூன்றாவது வருடம் துவங்கும் நாளை முதல் எல்லா பாதைகளும் அவனுக்கு ரோஜா மலர் சாலைகள் ஆக வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.அவனின் சிந்தனையும், அவற்றின் திடமும் அவன் பயணம் செய்கின்ற பாதை வெற்றி பாதை ஆக வாழ்த்துக்கள் .இந்த வருடத்தின் இந்த நாள் அடுத்த வருடம் உதயம் ஆகும் நேரம் அவன் தன் முயற்சியில் புதிய சாதனைகள் படைத்து மீண்டும் தாயகம் திரும்பும் பொற்காலம் என்ற நிச்சயத்துடன் , நிறைவு செய்கின்றேன்.

Wednesday, August 8, 2012

MERCURY POOKKAL-BY BALAKUMARAN

மெர்குரி பூக்கள் பாலகுமாரனின் மெர்குரி பூக்கள் சுமார் இருபத்தி ஐந்து வருடங்ககுக்கு முன் ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது நன் முதல் முறை படித்தேன். பின்னர் திருமணம் முடிந்த பின் கல்கத்தா பட்டி மண்டபம் ஒன்றில் நானும் என் மனஈவியும் இரு வேறு கட்சிகலக பிரிந்து இந்த தொடரின் சாதக பாதகங்கள் பற்றி விவாதித்தோம்.அதன் பின் பலமுறை பலவேறு கல கட்டங்களில் மெர்குரி பூக்கள் என் விவாத பொருளாக மட்டும் இன்றி என் வாழ்வின் பரிமாணங்களை உயர்த்தும் தொடராகவும், வாழ்வின் பல செயல்களின் தர்ம நியாயங்களை அந்த செயல்களில் இருந்து விலகி இருந்து புரிந்து கொள்ளும் பக்குவம் பெற எனக்கு உதவி புரிந்தது. ஆண் மற்றும் பெண்களின் உறவுகளின் மேன்மை மற்றும் அதன் விளைவாக தோன்றும் மன மயக்கங்கள் ,,அதை பார்க்கின்றோரின் பார்வையின் விரிவுகள் என கதை சுருக்கம் சொல்லிவிடலாம்.சங்கரனும்,ஷியாமளியும் ,சாவித்திரியும்,கோபாலனும் முக்கிய பாத்திரங்கள்.நீங்களும் நானும் தினம் பார்க்கின்ற உலகத்தின் சில சாயல்களே இவர்கள்.கதையின் களம் கார் உற்பத்தி செய்யும் ORU தொழிற்சாலை.அங்கு ஏற்படும் தொழிலாளர் பிரச்சனை , அது தொடர்பாக ஏற்படுகின்ற உரசல்கள், இவை காரணமாக மேற் சொன்ன கதா பாத்திரங்களின் வாழ்வில் ஏற்படும் உறவு மயக்கங்கள். கதையின் மிக நேர்த்தியான படைப்பு சாவித்திரி.பாரதி கண்ட பெண்ணாக, தெளிவான சிந்தையும், உரமும், ஆண் பெண் உறவு பற்றிய தெளிவும் கொண்ட பெண் .இதற்கு நேர் மாறாக உணர்வுகளுக்கு அடிமை ஆகும் பெண்ணாக ஷியாமளி,அவளின் படி தாண்டிய செயல், அதற்க்கு இருக்கும் நியாயம், கவிதை நேசிக்கும் சங்கரன் , அவனை நேசிக்கும் ஷியாமளி,அவள் வீட்டில் இருக்கும் புருஷன் மற்றும் மகள் அவர்களின் ஒட்டாத உறவு என கடை புலன் விரிகின்றது.சாவித்திரியும் கோபாலனும் சந்திக்கும் இடங்கள் ஆண் பெண் உறவின் உன்னத உச்சங்களை சொல்கின்றது என்றால் ,சங்கரன் ஷியாமளி உறவு, ஆண் பெண் சறுக்கும் இடங்களையும், அதன் காயங்களையும், வலியையும் சொல்கின்றது. ஒவ்வொரு பெண்ணின் மனத்தில் இருக்கும் கற்பனைகளும், அவை நிறைவேறாதபோது ஏற்படும் சிக்கல்கள் ஒருபுறமும், பெண் என்பவள் எப்படி மாபெரும் சக்தியாக, , நல்ல துணையாக, நம்பிக்கை நட்சத்திரமாக உரு பெற முடியும் என்பது மறு புறமாக, நீரோடை போல் பாலகுமாரனின் கதை செல்கின்றது. ஒரு ஆடவனின் துயரங்கள், மற்றும் பெண்ணின் துயரங்கள் மிக நேர்த்தியா சொல்லப்படும் அதே வேளையில் , அவர்களின் புரிதல் இன்மை எப்படிப்பட்ட உறவு விரிசல்களை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த புத்தகம் கட்டியம் சொல்கின்றது. மழை தாலாட்டும் ஒரு மாலை நேரத்தில், என் மகளின் மகவு என் மடியில் அயர்ந்து உறங்கும் இரண்டு மணி நேரங்களில் மீண்டும் நான் மெர்குரி பூக்களில் முத்து குளித்தேன்.எதிர்பார்ப்பு இல்லாது அன்பு செய்வது ஒன்றே உலகத்தின் அமைதிக்கும், ஆண் பெண் உறவு மேம்படவும் வழி வகை செய்யும் என்ற பதிவு சாவித்ரியின் மூலமாக, கோபாலனுக்கு சொல்வது போல் எல்லோருக்கும் .கூறப்படுகின்றது. தி ஜானகிராமனின் மரப்பசு அம்மணியும் ,மோகமுள்ளின் யமுனாவும் மனதில் வந்து செல்கின்றார்கள்.intha செய்தியும் இதன் தாக்கமும் உடனே intha மின் அஞ்சல் செய்ய உந்தல் செய்தது.யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெருக.

Sunday, August 5, 2012

FRIENDSHIP DAY

FRIENDSHIP DAY While no one has a choice regarding one’s father, mother, brother and sister and sometimes even with reference to his/her better half, certainly each has a choice on friends. And friends are always friends and there is nothing known as good friends and bad friends. If someone is bad and evil to a person, he/she cannot be a friend at all to that person.And such friends make the life beautiful and enjoyable . They are like a soothing breeze when you are in pain and they are like rocks to support when one is in distress. They are the ones who enjoy your success more than you do and they are the one who suffer when you go thru a lean period or fall. Right from child hood to date, one might have cultivated friendship with many. Few of them come along thru out the life cycle and few of them disappear half way thru. Few of them play hide and seek all the same. So what!!When you are in their mist, you feel free, warm and happy and that feeling can not be measured in terms of money.Here thru this column I wish all of them A VERY HAPPY FRIENDSHIP DAY .And this day reminds me of some of my greatest Friends and this blog post is in honour of every such friend and in particular my friend son!! Whether they be in touch with me on date or not. I recall my wonderful times spent with every one of them thru this blog.