Pages

Sunday, March 31, 2013

ஆகாயத்தில் ஏறும் விமானங்கள்

ஆகாயத்தில் ஏறும் விமானங்கள் (இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங் களுக்கு நன்றியுடன்) நான் வசித்து வருவது மடிப்பாக்கத்தில்.சென்னை விமான நிலையம் இயங்கி வரும் மீனம்பாக்கம்/திரிசூலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம். சென்னையின் புறப்பகுதிகள் அவ்வளவாக வளர்ச்சி அடையாத சுமார் 30 வருடங்களுக்கு முன், நல்ல காற்றும்.சுவை மிகு குடி நீரும் , பசுமை வயல் பரப்புகளும், பனை மரதோப்புகளும் மடிப்பாக்கத்தின் அடையாளங்களாக இருந்த நேர்த்தியான காலகட்டம் அது. கா ற்றை மறைக்கும் விண்ணை தொடும் கட்டிடங்கள் இன்னும் உறவு கொல்லா(ள்ளா )த /நேரம் அது. மா லையும் இரவும் சந்திக்கும் நேரத்தில், தூரத்தில் தெ ரியும் பரங்கி மலை மற்றும் திரி சூல மலைகளின் பின் புலத்தில், தென்றல் வருடிக்கொடுக்க, பஞ்சாயத் ரேடியோவில் மனத வருடும் பாடல்கள் ஒலி பரப்பாக, தரை யில் இற ங்கும் விமானங்களின் அழகு . இந்துமதி அவர்களின் தொடர் கதை படித்தவுடன், இன்னும் மனதுக்கு அருகாமையில் இசை சாரல் தூவ, எதோ ஒரு நாள் என் வாழ்க்கையில் நானும் அதில் பயணி க்க வேண்டும் என்ற கனவு தோன்றிய களம் அது.. சற்றேரக்குறைய சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் என் அலுவல் நிமித்தம் காரணமாக என் முதல் பயணம் சென்னையில் இருந்து தலை நகரமான டில்லிக்கு நான் செல்ல நேரிட்ட போது அந்த முதல் கனவு நிறைவேறியது.அதன் பின்னர் விமான பயணம் என்றாலே ஒ ரு அலுப்பும் சலிப்பும் அற்படும் அளவுக்கு பல பயண ங்கள். ஆ னாலும் கோடை கா ல இரவு நேரங்களில், நிர்மலமான ஆகாயத்தில் விண்மீன்களின் கண் சிமிட்டலை ரசிக்கும் நேரங்களில், ஏறும் மற்றும் இறங்கும் விமானங்களின் அழகு மனதை பிரமிக்க வைக்கும்.. பல வருடங்களுக்கு பிறகு 2010ஆம் ஆண்டு ஒரு இரவுபொழுது.என் மகனும் என் மகளும் அவர்களின் எதிர் கால சிந்தனைகளை என்னுடன் பரிமாறிக்கொண்ட நேரம்.சட்டென்று மேலே பார்த்த போது ஒரே நேரத்தில் இரண்டு விமானகள் வெ வ்வேறு திசைகளில் பயணிக்க கண்டேன்.என்னுள் ஒரு குரல் கூறியது. நான் பார்த்த கா ட்சி இனி வர போகும் காலத்துக்கான ஒரு பதிவு என்று.ஆம் ! என் மகனும் மகளும் வெளி நாடு செல்ல போகின்றார்கள் என்று அந்த கணம் எனக்குள் தோன்றியது ஒர் சத்தியம்..அந்த நிமிடம் முதல் எப்போதெல்லாம் நான் என் நடை பயிற்சிக்காக மொட்டை மாடியில் நடக்க போகின்றேனோ அப்போதெல்லாம் என்னையும் அறியாமல் என் மனமும், பிரார்தனையும் அவர்கள் பயணம் மேற்கொள்ள ஒரு விதையாக ஊன்றி விட்டது. 2010 இறுதியில் என் மகன் ஹாங்காங் பயணமும் என் மகள் 2011 ஆரம்பத்தில் அமெரிக்க பயணமும் மேற்கொண்ட போது அவர்களை வழி அனுப்ப நான் விமான தளம் சென்ற போது மேற்சொன்ன நினைவலைகள் என்னில் படர்ந்தன, மீண்டும் ஹாங்காங் நகரத்தில் எங்கள் அறைக்கு செல்ல நானும் மனைவியும் என் மகனோடு மின் தூக்கிக்காக காத்து இருந்த அந்த தங்க நிமிடங்களில் இந்த நினைவுகள் மீண்டும் என்னுள் படர்ந்தன . (மேலும் படரும் ) (Please visit kodvasri@blogspot.com (Ignorance is bliss)for all posts related to my recent Hongong visit sofar)

Sunday, March 24, 2013

Hongkong- a beautiful fower

ஹாங்காங் ஒரு மனோ ரஞ்சிதம் மனோ ரஞ்சிதம் என்று ஒரு பூ உண்டு. அந்த பூவின் ஒபெயர் ஒரு காரணப்பெயர்..எந்த வசனி மனதில் நினைத்து அந்த பூ முகர படுகின்றதோ அந்த வாசனை அந்த பூவில் இருந்து கிடைக்கும் என்பார்கள். ஹாங்காங் நகரம் என்னை பொருத்தவரை ஒரு மனோ ரஞ்சிதம். எந்த தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அந்த நகரத்தை பார்கிறோமோ அந்த அனுபவம் கொடுக்கும்.நகரம். பென்ஸ் விமான தளம் விட்டு வெளியே வந்த போது . சரேலென்று மேலே தூரத்தில் எழுந்த மலைகள், இதமாக அதில் இருந்து வீசிய தென்றல் , கீழே படுக்கை விரித்து படுக்கவும் சாப்பிடவும் தூண்ட கூடிய அளவுக்கு அழகான அளவான அம்சமான சாலைகள், அதில் பயணிக்கும் ஊர்திகளின் வேக கட்டுப்பாடு, சாலை விதிகள் கடை பிடிப்பதில் அவர்களுக்கு உள்ள ஒழுங்கு, பக்கத்திலேயே தொடர்ந்து வரும் அதி வேகமான விமான தளத்தை நகரத்துடன் இணைக்கும் சிறப்பு ரயில் , அந்த பாதை நெடுகிலும் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டு கண்காணிக்கும் உயர் தரமுள்ள காமிராக்கள் , எங்கே இருக்கிறோம் என்று கா ட்டி கொள்ளாமல் , அதே சமயம் தேவை படும் போது சட்டென்று உதவி செய்ய வரும் காவலின் அம்சங்கள், திடீரென்று உயர்ந்து பிரமிக்க வைக்கும் தொங்கு பாலங் கள், சட்டென்று கதகதப்பை கொடுக்கும் , கடலுக்கடியில் செல்லும் நீண்ட சுரங்க பாதைகள் , அந்த சுரங்க பாதைகளின் இரு மருங்கிலும் மாசு மருவில்லாமல் துவங்கும் சுவர்களின் பளிச் , இரவை பகலா க்கியது போல் மின்னும் ஒளி விளக்குகள் பயணம் முழுவதும் எங்கும் முழங்காத ஹாரன் சப்தம் ......ஆம் அந்த மாயன் படைத்தானோ என்று வியக்க வைக்கின்ற நகரத்தில் நுழையு முன் ஏற்படுகின்ற அனுபவங்கள் இவை !! கிராஸ் பா ர்டர் குகை சாலையும், TSIMTSATSUI சிட்டியும் என் மகன் இ ருப்பிடம் அருகில் வந்து விட்டது எ ன்று கட்டி யம் கூற ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலை கழகம் இன்டர்நேஷனல் GUEST ஹவுஸ் வாசலில் எங்கள் கார் அமைதியாக சென்று நின்ற அந்த நி மிடம், என் மகனின் இன்னொரு முயற்சிக்கு ஆதரவும் அணைப்பும் கொடுத்த அந்த கட்டிடம் எனக்கு செங்கல் கட்டிடமாக தெரியவில்லை.அன்பும் அமைதியும் ஆற்றலும் அளிக்கும் ஒரு கோவிலாக அதை நான் தரிசித்தேன் .!! (இன்னும் தரிசிப்பேன்)

Friday, March 22, 2013

FEW QUESTIONS AND ANSWERS-MY HONGKONG JOUNEY -CONTINUED!

கேள்வியு ம் பதிலும் நான் ஹாங்காங் போவதற்கு முடிவு செய்த நிமிடம் முதல் போ ய் சேர்ந்து மீண்டும் சென்னை வந்து சேரும் வரை மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பல. அவற்றில் சில இங்கே . இந்த பயணம் என் இவ்வளவு அவசரஅ வசரமாக மேற்கொள்ளப்பட்டது/ என் 4 நாட்களுக்காக மட்டுமே ஒரு பயணம்/ வேறு எந்த இடங்கள் செல்லப் போகின்றேன்/ இந்த பயணம் என் சொந்த பயண மா அல்லது யாராவது இந்த செலவு ஏற்றுக் கொள்கின்றார்களா / சில கேள்விகள் உண் மையில் கரிசனத்துடன் கேட்கப்பட்டவை. , வேறு சில என்னை ஆழம் பார்க்கும் கேள்விகள்., ஆயி னும் நான் என் சுயம் காத்தேன்.என்னை பொறுத்தவரை இந்த பய ணத்தின் முழு நோக்கம் என்னை வளர்த்த என் சகோதரி என்னுடனும் என் மனைவியு டனும் வந்து என் மகனை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதும், எங்கள் இந்த பயணம் என்னுடைய மகனின் முக்கிய ஒரு கால கட்டத்தில். அவனது அறிவு தேடல் பயணத்தில் , ஒரு புத்துணர்வு சேர்க்கவும், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் அவனை சார்ந்து இருக்கின்றன என உணரவும் உணர்த்தவும் மட்டுமே. PhD ஆய்வு படிப்பு என்பது படிப்பவர்கள் எல்லோரையும் ஏகலைவனாக மாற்றும். ஒரு வித்யாசம்,,இங்கே ஆதர்ஷ புருஷர்களாக துரோணரும் இல்லை.தகப்பன் சாமியும் இல்லை. . தானே கேள்வி தானே பதில் , தானே தன்னை ஊக்குவித்து கொண்டும் தானே தன சருக்கல்களில் இருந்து மீண்டு சுதாரித்து கொண்டும், பகிர்ந்து கொள்வதற்கு பல நேசங்கள் இல்லாத போதும் இருக்கும் சிலரிடம் அளவோடு பேசி தன்னை தானே உருவாக்கி கொண்டு பயணம் செய்யும் ஒரு மாபெரும் வேள்வி இது. இந்த பயணம் முடியும் போ து வரும் பரிசுகள் பாராட்டுகள் அனைவரும் அறிவர். ஆனால் கடந்த மைல் கற்கள் ,அனுபவித்த வலிகள் பலரும் அறியாதவை அதிலும் ஹாங்காங் போன்ற ஒரு வெளி நாட்டில் (இந்திய வம்சாவழியும் அதிலும் தமிழ் பேசும் உற்றமும் சுற்றமும் மிக குறைவாக இருக்கின்ற ஒரு இடத்தில் ) இந்த தேடலின் வீரியமும் ,பரிமாணங்களும் அளவிட முடியாதவை. அந்த பயணத்தில் எங்கள் அனைவரின் பக்க பலமும் அந்த தேடலில் ஈடு பட்டுள்ள என் மகனுக்காகவே உ ள்ளன என்று உணர்த்தவே இந்த பயணம் . பென்ஸ் காரில் ஏறி உட்கார இருந்த சில நிமிடங்களில் மனதில் தோன்றியவை இவை!! (இன்னும் தோன்றும் )

Wednesday, March 20, 2013

சில பார்வைகள் பல அர்த்தங்கள் விமான பறவை தன சிற குகளை மூடி தன கதவுகளை திறந்த அந்த நிமிடம் ஓடும் கூட்டத்துடன் கலந்து விடாமல் அந்த அனுவத்தை மனதில் தேக்கி நிதானமாக, பொருட்களை எடுத்து கொண்டு என் மகனை காணும் கணத்துக்காக மிக ஆவலுடன் கண்கள் அலை பாய தொடங்கின.. நகரும் படிகளை (escalator ) அணுகியபின் தான் என் தமக்கைக்கு அதில் ஏறி பழக்கம் இல்லை என்பது மனதில் உரைக்க என்ன செய்வது என்று எண்ணிய வேளையில் ஏர்போர்ட் ஊழியர் அருகே இருந்த மின் தூக்கியை சுட்டி கா ட்ட ஹாங்காங் தன சுற்றுலா பயணிகளின் தேவை அறிந்து உதவும் பண்பு மனதில் மழை சாரலாக விழுந்தது. சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் எங்கள் உடைமைகள் அனைத்தம் எடுத்து கொண்டு சற்றும் மாறாத அந்த இயந்திரத்தனத்துடன் கூடிய immigration ஆய்வுக்கு பின் வெளியே வரும் போது கனவு பார்வையுடன்(எங்கள் கனவுகளை நிறைவேற்றும் பார்வை) என் மகனும் கடமை பார்வையுடன் எனக்காக அனுப்பப்பட்ட ஓட்டுனரும் காத்திருந்த வாயில் கண்ணில் பட்டது. ஒரு சேர ஐந்து ஜோடி உதடுகள் புன்னகைக்க, ஐந்து ஜோடி கண்கள் ஒன்றோடு ஒன்று பல செய்திகள் அறிவிக்க அந்த கணம் நிஜமான நிறைவாக மனதில் இறங்கியது.. அதிகம் பேசாமல் வெளியே வந்து சேர அழகான அந்த கருப்பு நிற BENZ வெண்ணை போல் அருகே வந்து நிற்க அது வரை பூட்டப்பட்ட வார்த்தைகளும் அனுபவங்களும் ஒரு சேர ஒரே நேரத்தில் வெளி வரத்தொடங்கின. (மேலும் வரும்)

Tuesday, March 19, 2013

a thosand flowers bloom

cathay பசிபிக் விமானம் 7.3.2013 அன்று சென்னை விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் கிளம்பியபோது உள்ளம் எல்லாம் ஒரு பிரகாசம். இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஆனந்தம்.முதல் குழந்தை மிமுத்தமிடும் போதும் முதல் காதல் சொல்லபப்டும் போதும் தோன்றும் உல்லாசம் என பல உணர்வுகளின் சங்கமம்.விமானம் தாதரை விட்டு வேனில் எழுந்த அந்த கணம் உடலில் ஒரு புல்லரிப்பு. அருகே மனைவியும் என் மூத்த சகோதரியும் அமர்ந்திருக்க என் இந்த புதிய முகம் அவர்களுக்குள் ஒரு ஆச்சரியம் தோற்றுவித்திருக்கும்/அந்த உணர்வு பரவச நிலை சற்றே தாலாட்ட கண் அசந்த நேரம் விமான ப ணி பெண்ணின் இனிய குரல் என்னை எழுப்பியது. நேரம் பார்க்க கடிகாரத்தின் கா ந்த முள் காலை 5.30 எனக் காட்டியது. எதற்காக இவ்வளவு காலை வேலையில் எழுப்பப்பட்டேன் என்று உணரும் முன்னமே சுடசுட பரிமாறப்பட்ட இட்லியும் , அது ஊறி திளைத்து இ ருந்த சாம்பாரின் மண மும் ,சேமிய உப்புமாவும்,அதன் துணை வந்த கா ர சட்னியும் , இவை எல்லாவற்றுக்கும் மேல் மண ம் பரப்பி வந்த coffee மனமும் ஒரு சேர, புலன்கள் அனைத்தும் எழுப்பி விட, அப்போது தான் அது காலை உணவு என்பதும் , பறந்து கொண்டிருக்கும் நாட்டின் நேரம் காலை 8 மணி என்பதும் ஒரு சேர நினைவுக்கு வந்தது. நல்ல வேளை , விமானம் புறப்படும் முன் நாங்கள் மூவரும் காலை கடன்களை நிறைவேற்றி இருந்ததால் அந்த உணவு அந்த அதி காலை வேளையில் ஒரு நல்ல துவக்கம் ஆக அமைந்தது . இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஹாங்காங் வந்து விடும் என்ற எண்ணம் மனதில் பட்டா ம் பூச்சி பறக்க விட்டது என்றால் மிகை இல்லை. அதற்கு முன்னர் எனது ஹாங்காங் பயணங்கள் எல்லாம் சிங்கப்பூர் அல்லது மலேசியா மூலமே இருந்தது என்பதால் அதிகாலை வேளை அங்கே இறங்கி, சற்றே அந்த விமான நிலையங்களின் அழகில் மனம் தோய்ந்து பின்னர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் ஹாங்காங் அடைவது வழக்கம் .ஆனால் இந்த மு றை எனது வயதான சகோதரி என்னுடன் வந்த காரணத்தால் நேராக சென்னை ஹாங்காங் பயணம் தரவு செய்தேன், மேலும் 5 மணி நேரத்தில் என் மகனை பார்த்து விட முடியும் என்ற எண்ணமும் இந்த தேர்வுக்கு கார ணம். இவற்றை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் விமானம் தரை இறங்க போகின்றது என்ற அறிவிப்பு செவியில் தேனாக பாய்ந்தது சரியாக ஹாங்காங் நேரம் 10/35 மணி அளவில் விமானம் தரை இறங்கியது ஆயிரம் தாமரை மொட்டுக்கள் என் மனதில் , ஒரு சேர பூத்து குலூங்கின!! (மீண்டும் பூக்கும் ).

Monday, March 18, 2013

ஹாங்காங் -மறு பார்வை

ஹாங்காங் -மறு பார்வை 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அந்த பூலோக சொர்க்கம் .ஆம் எனது ஹாங்காங் பயணம் பற்றிய குறிப்பு வரையச் சொன்னால் அந்த அனுபவம் ஒரு தெவிட்டாத பேரானந்தம் என்று சொல்ல வேண்டும். நகரங்கள் எல்லாம் நல்லவை தான் .அவற்றில் நமக்கு ஏற்படும் அனுபவங்களே .அவற்றை நல்லவை என்றும் அல்லவை என்றும் நம் மனதில் ஒரு பதிப்பை ஏற்படுத்துகின்றது என்று கூறுவார்கள் . அதை மனதில் வைத்து பார்க்கும் போது இந்த பூமி எனக்கு அளப்பரிய சந்தோஷ அலைகளை தோற்றுவித்தது.சிலரை நமக்கு பார்த்ததும் பிடிக்கும் .சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்.வேறு சிலரை பார்த்தாலே பிடிக்காது போய்விடும்.இதன் காரணங்களை ஆராய்வது மேலும் குழப்பத்தை உண்டாக்கும்.அது போல் ஹாங்காங் ஏன் எனக்கு பிடித்தது என்ற கேள்விக்கு பார்த்ததும் பிடித்த நகரம் எற்று மட்டுமே கூற முடியும். ஆனால் சற்றே ஆழ்ந்து சிந்திக்கும் போது பல காரணங்கள் தோன்றுகின்றன. முன்னம் என் ஹாங்காங் வாழ்க்கை(1997-2001) என் வேலை சார்ந்த சிறப்பினை எனக்கு அளித்ததினாலும்,என் மனது க்கு பிடித்த இலக்கிய கதவுகளை தரிசிக்க மீண்டும் வழி வகுத்ததனாலும் (இது இரண்டாவது காதல் ,முதல் காதல் களம் கொல்கத்தா ) என் ஆன்மிக அனுபவங்கள் சிலவற்றை மேலும் செம்மை படுத்திய தா லும் (நன்றி -திரு விஸ்வநாதன்) எனக்கு பிடித்தது என்ட்றா ல் ,இம்முறை (பிப் 2013)இந்த நகரம் மீண்டும் மீண்டும் என்னை ஒரு காந்தமாக இருந்து என்னை ஈர்த்தமைக்கு மூல காரணம் என் மகன். அவன் படிக்கும் படிப்பு சம்பந்தமாக அவன் ஹாங்காங் போய் சேர்ந்ததில் இருந்து கடந்த 3 வருடங்களாக கற்பனை செய்து வந்த இந்த பயணம் இப்போது நினைவாக மாறியது .ஆம் ஒவ்வொன்றும் ஒரு விதிப்படி நடக்கின்றன என்பது மீண்டுமிந்த பயணம் எனக்கு உணர்த்தியது. (தொடரும்)