Monday, March 18, 2013
ஹாங்காங் -மறு பார்வை
ஹாங்காங் -மறு பார்வை
12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அந்த பூலோக சொர்க்கம் .ஆம் எனது ஹாங்காங் பயணம் பற்றிய குறிப்பு வரையச் சொன்னால் அந்த அனுபவம் ஒரு தெவிட்டாத பேரானந்தம் என்று சொல்ல வேண்டும்.
நகரங்கள் எல்லாம் நல்லவை தான் .அவற்றில் நமக்கு ஏற்படும் அனுபவங்களே .அவற்றை நல்லவை என்றும் அல்லவை என்றும் நம் மனதில் ஒரு பதிப்பை ஏற்படுத்துகின்றது என்று கூறுவார்கள் .
அதை மனதில் வைத்து பார்க்கும் போது இந்த பூமி எனக்கு அளப்பரிய சந்தோஷ அலைகளை தோற்றுவித்தது.சிலரை நமக்கு பார்த்ததும் பிடிக்கும்
.சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்.வேறு சிலரை பார்த்தாலே பிடிக்காது போய்விடும்.இதன்
காரணங்களை ஆராய்வது மேலும் குழப்பத்தை உண்டாக்கும்.அது போல் ஹாங்காங் ஏன் எனக்கு பிடித்தது
என்ற கேள்விக்கு பார்த்ததும் பிடித்த நகரம் எற்று மட்டுமே கூற முடியும். ஆனால் சற்றே ஆழ்ந்து சிந்திக்கும் போது பல காரணங்கள் தோன்றுகின்றன.
முன்னம் என் ஹாங்காங் வாழ்க்கை(1997-2001) என் வேலை சார்ந்த சிறப்பினை எனக்கு அளித்ததினாலும்,என் மனது க்கு பிடித்த இலக்கிய கதவுகளை தரிசிக்க மீண்டும் வழி வகுத்ததனாலும் (இது இரண்டாவது காதல் ,முதல் காதல் களம் கொல்கத்தா ) என் ஆன்மிக அனுபவங்கள் சிலவற்றை மேலும் செம்மை படுத்திய தா லும் (நன்றி -திரு விஸ்வநாதன்) எனக்கு பிடித்தது என்ட்றா ல் ,இம்முறை (பிப் 2013)இந்த நகரம் மீண்டும் மீண்டும் என்னை ஒரு காந்தமாக இருந்து என்னை ஈர்த்தமைக்கு மூல காரணம் என் மகன்.
அவன் படிக்கும் படிப்பு சம்பந்தமாக அவன் ஹாங்காங் போய் சேர்ந்ததில் இருந்து கடந்த 3 வருடங்களாக கற்பனை செய்து வந்த இந்த பயணம் இப்போது நினைவாக மாறியது .ஆம் ஒவ்வொன்றும் ஒரு விதிப்படி நடக்கின்றன என்பது மீண்டுமிந்த பயணம் எனக்கு உணர்த்தியது.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment