Wednesday, February 20, 2013
anbulla kadhalikku!!
என் முகம் தெரியாத காதலிக்கு
உன் முகம் மட்டுமே நினைக்கும்
காதலன் எழுதும் மடல்
காதல் தெரியாதவன் நான்
காதலை எனக்கு ஊட்டியவள் நீ
கவிதையின் சந்தம் ரசித்தவன் நான்
காவிய முத்தம் காட்டியவள் நீ
இயற்கை எழிலை ரசித்தவன் நான்
உன்னை மட்டுமே ரசிக்க மாற்றியவள் நீ
கரம் தொட அஞ்சியவன் நான்
என் தோள்களே உன் ஊஞ்சல்கள் என்றவள் நீ
நண்பர்களை நேசித்தவன் நான்
நண்பர்களை விரோதி ஆக்கியவள் நீ
நயமாக பேசுபவன் நான்
பிறர் நலிவடைய பேசுபவள் நீ
என் குரல் உயர்ந்தாலோ அது ஆணாதிக்கம்
என் குரல் தாழ்ந்தாலோ அது ஆண்மைன்மை
பிறன் குரல் உயர்ந்ததால் பரவசம்
பிறன் குரல் தாழ்ந்தால் அது பெண்ணீயம்
காதல் என்பதை நீ அறிவாயா
கட்டி தழுவது காதல் அல்ல
காயப்படுத்துவது காதல் அல்ல
கரிசனம் கட்டுவது காதல்
பெற்றோருக்கு பயப்படுவது காதல் அல்ல
பெற்றோரையும் மாற்றுவது காதல்
அடைந்து கொள்வது காதல் அல்ல
அடைத்து வைப்பதும் காதல் அல்ல
தூய மலரின் மணம் காதல்
காலை சூரியனின் ஒளி காதல்
தேகம் தொடும் தென்றல் காதல்
தெய்வ தரிசனம் காதல்
காதல் பொய் சொல்வதில்லை
காதல் அலைக்கழிப்பதில்லை
காதல் பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை
காதல் இதயங்களை உடைப்பதில்லை
உண்மை காதல் உருகும்
ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைக்கும்
நீ அழுதால் தான் அழும்
நீ சிரித்தாள் தான் சிரிக்கும்.
ஆம், நான் உண்மை காதலின் சின்னம்
நீ?
என்றென்றும் அன்புடன்
காதலை மதிக்க தெரிந்த ஒருவன்
காதலை மிதிக்க தெரிந்த ஒருவளுக்கு
எழுதும் இதய ஒலி.
Intended to be published on valentine day, delayed due to a small surgery i had to undergo!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment