Wednesday, February 20, 2013
KURINCHI MALAR
குறிஞ்சி மலர்
சுமார் 50 வருடங்களுக்கு முன் குறிஞ்சி மலர் என்ற வார்த்தை எனக்கு முதல் முறை பரிச்சயம் ஆனது.
திரு நா பார்த்த சாரதி அவர்கள் கல்கியில் எழுதிய 'குறிஞ்சி மலர் ' என்ற தொடர் கதை என் வாழ்வின் பல பரிமாணங்களை எனக்கு புரிய முதல் விதை.
குறிஞ்சி மலர் நாயகன் மற்றும் நாயகியான அரவிந்தனும் பூரணியும் ஒரு நல்ல ஆ ணுக்கும் ஒரு அன்பான பெண்ணுக்கும் நல்ல ஆதர்சனங்கள் .
எம் முதல் காதல் குறிஞ்சி மலரின் மேல் ஏற்பட்டது இந்த வயதில் தான்.
பின்னர் ஒரு நாள் திரு நா பார்த்தசாரதி அவர்கள் கல்கத்தா தமிழ் மன்றத்துக்கு வருகை தந்த போது , அவர்களிடம் செலவழித்த அற்புத நிமிடங்கள் என் குறிஞ்சி காதல் பல மடங்கு அதிகமாக கரணம் ஆக அமைந்தது .
12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் இந்த மலரை நான் பார்க்க சுமார் 20 வருடங்கள் காக்க நேர்ந்தது.என் திருமணத்துக்கு பின் கொடைக்கானல் சென்ற போது குறிஞ்சி ஆண்டவர் கோயிலும்,குறிஞ்சி பூக்காடும் எனக்கு காணக் கிடைத்தது.அந்த பரவச உணர்வை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .அனுபவம் என்பது தனி மனித உணர்வு வெளிப்பாடு என்று நான் உணர்ந்தது அங்கு தான் .
12 என்பதற்கு ஒரு தனி மகிமை உண்டு .கும்பகோணம் மகா மகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை தான்.ஒரு வருடம் என்பது 12 மாதங்கள் கொண்டது.கும்ப மேளா வருவதும் 12 வருடத்துக்கு ஒரு முறை தான் .ஒரு நாளின் மணிக் கணக்கை 12 மணி என்ற அளவில் தான் பகிர்த்து காண்கின்றோம். குறிஞ்சி மலரும் 12 வருடத்துக்கு ஒரு முறை காணக் கிடைக்கும் அதிசயம் .
என் எண்ணங்கள் இப்போது ஏன் இந்த 12 என்ற எண்ணில் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு விடை என் ஹாங்காங் பயணத்தில் உள்ளது
ஆம் .கடந்த 2001 டிசம்பர் மாதம் ஹாங்காங் மண்ணிடம் விடை பெற்று இந்தியா திரும்பியபோது மீண்டும்
ஹாங்காங் மண்ணை மிதிப்போம் என்று நிச்சயமாக எண்ணவில்லை,
வாழ்க்கை என்பது ஒரு வட்டம் , அதில் ஒரு சில அனுபவங்கள் மீண்டும் மீண்டும் நம்மை நம்மை வந்து அடைகின்றன என்பது, என் மகன் அவனுடைய படிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, ஹாங்காங் சென்றபோது எனக்கு புலனாகியது.அவனை சந்திக்கும் எண்ணம் ஒரு காரணியாக இருந்து என்னை இயக்க, கடந்த இரண்டு வருடங்களாக உள்ளே இருந்த இந்த விதை, இப்போது முளை விட, குருவின் அருளும் குருநாதனின் அழைப்பும் ஒரு சேர ,யூனுஸ் பாயின் அன்பு இல்லம் வரவேற்புடன் காத்திருக்க , பிரசாத், ராம் போன்ற எண்ணற்ற நண்பர்களின் அன்பு நெஞ்சங்கள் காந்தமாக எனை இழுக்க 12 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஹாங்காங் மண்ணை தொடும் அந்த நன்நாளை முதல்முதல் குறிஞ்சி மலரை ஸ்பரிசித்த அந்த கணத்தில் நெஞ்சத்தில் எழுந்த பரவசத்துடனும்,ஆவலுடனும் எதிர் பார்த்து காத்து இருக்கின்றேன்,
அனைவருக்கும் அன்புடன்
சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment