It is a month since my son's arrival at CHENNAI. THOUGHT OF REVISITING my earlier welcome address to him now thru this blog , which is also forming part of publication by HK TAMIL school in their october issue.
இல்லம் திரும்பும் இளைஞனுக்கு
இனியதொரு தாலாட்டு
ஆயுத பூஜை இன்று
உன் நலம் விழைகின்றது!
விஜயதசமியின் விஜயம்
உன் ஜெயம் பாடுகிறது!
பலமில்லா கால்கள் அன்று
பாயும் நீரோடை இன்று !
சர்வோஜனா சுகினோ பவந்து
ஒரு முகவுரையாய் அன்று !
எல்லோரும் நேசிக்கும்
ஒரு இளைஞனாய் இன்று !
பாதைகள் மாறினாலும்
பண்புகள் மாறவில்லை!
மாறாதது மாற்றம் அது
மனம் காக்கும் மந்திரம்!
வானம் இன்னும் விரிவடையும்
உன்னுயரம் இன்னும் விண்ணை தொடும்!
நடந்து வந்த பாதையும்
நடை போடும் பாதையும்
நடக்க போகும் பாதையும்
நேற்றும் ,இன்றும் நாளையுமே !!
வாழ்க்கை ஒரு வினோதம்
வானவில்லின் வடிவும் வனப்பும்
சொல்லில் அடங்கா வெறுப்பும் துயரும்
இங்கே நடை முறை நிதர்சனங்கள் !
இவை இரண்டும் ஒரு நாணயத்தின்
இரு பக்கம் என உணர்ந்ததால் நீ
ஒரு ஷேக்ஸ்பியர் என உணரபடுவாய்
உன்னை சேர்ந்தோரை உணர்விப்பாய் !
தந்தையும் மகனுமாய் இல்லாது
தாயும் சேயுமாய் இல்லாது
சக மனிதர்களை நேசிக்கும்
நம் பாலம் நமக்கு சொர்க்கம்!
நம் தர்க்கங்கள் நீண்டவை
வாக்குவாதங்கள் வல்லவை
ஒவ்வொன்றும் ஒரு கற்கண்டு
அன்னியற்கோ அது கல் குண்டு!
தங்கை நல்லாளின் முறுவலும்
அவள் தன் குருத்தின் மழலையும்
விண்ணவரின் ஆசியும் மண்ணோரின்
நேசமும் உனக்கு காப்பு கட்டும் கவசம் !
முப்பது ஆண்டுகள் உன்னை சுமந்தன
இனி மீதம் உள்ளவை நீ சுமப்பவை
சுமையும் ஒரு சுகம் தான்
சுற்றி உள்ளோருக்கு ஒரு உரம் தான்!
நினைப்பதெல்லாம் நடக்ககூடும்
நித்திலம் உன் கை வசப்பட கூடும்
நிதானமும் நிஜமும் உன்னிடம் இருப்பதால்
வானமும் மண்ணும் உன் வசப்படட்டும் !
இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
உன்னை மலர் தூவி வாழ்த்தட்டும்.
உன் தேடல்கள் சுகமாய் சுவையை
சேர்க்கும் காலமாய் அமையட்டும் .
அன்புடன்
உன்னில் எனை கொடுத்து
உன்னில் எனை தொலைத்து
உன்னில் எனை பார்த்து
உன்னில் என்னை உயர்த்தும்
நட்புடன் தந்தை .
No comments:
Post a Comment