Pages

Wednesday, August 8, 2012

MERCURY POOKKAL-BY BALAKUMARAN

மெர்குரி பூக்கள் பாலகுமாரனின் மெர்குரி பூக்கள் சுமார் இருபத்தி ஐந்து வருடங்ககுக்கு முன் ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது நன் முதல் முறை படித்தேன். பின்னர் திருமணம் முடிந்த பின் கல்கத்தா பட்டி மண்டபம் ஒன்றில் நானும் என் மனஈவியும் இரு வேறு கட்சிகலக பிரிந்து இந்த தொடரின் சாதக பாதகங்கள் பற்றி விவாதித்தோம்.அதன் பின் பலமுறை பலவேறு கல கட்டங்களில் மெர்குரி பூக்கள் என் விவாத பொருளாக மட்டும் இன்றி என் வாழ்வின் பரிமாணங்களை உயர்த்தும் தொடராகவும், வாழ்வின் பல செயல்களின் தர்ம நியாயங்களை அந்த செயல்களில் இருந்து விலகி இருந்து புரிந்து கொள்ளும் பக்குவம் பெற எனக்கு உதவி புரிந்தது. ஆண் மற்றும் பெண்களின் உறவுகளின் மேன்மை மற்றும் அதன் விளைவாக தோன்றும் மன மயக்கங்கள் ,,அதை பார்க்கின்றோரின் பார்வையின் விரிவுகள் என கதை சுருக்கம் சொல்லிவிடலாம்.சங்கரனும்,ஷியாமளியும் ,சாவித்திரியும்,கோபாலனும் முக்கிய பாத்திரங்கள்.நீங்களும் நானும் தினம் பார்க்கின்ற உலகத்தின் சில சாயல்களே இவர்கள்.கதையின் களம் கார் உற்பத்தி செய்யும் ORU தொழிற்சாலை.அங்கு ஏற்படும் தொழிலாளர் பிரச்சனை , அது தொடர்பாக ஏற்படுகின்ற உரசல்கள், இவை காரணமாக மேற் சொன்ன கதா பாத்திரங்களின் வாழ்வில் ஏற்படும் உறவு மயக்கங்கள். கதையின் மிக நேர்த்தியான படைப்பு சாவித்திரி.பாரதி கண்ட பெண்ணாக, தெளிவான சிந்தையும், உரமும், ஆண் பெண் உறவு பற்றிய தெளிவும் கொண்ட பெண் .இதற்கு நேர் மாறாக உணர்வுகளுக்கு அடிமை ஆகும் பெண்ணாக ஷியாமளி,அவளின் படி தாண்டிய செயல், அதற்க்கு இருக்கும் நியாயம், கவிதை நேசிக்கும் சங்கரன் , அவனை நேசிக்கும் ஷியாமளி,அவள் வீட்டில் இருக்கும் புருஷன் மற்றும் மகள் அவர்களின் ஒட்டாத உறவு என கடை புலன் விரிகின்றது.சாவித்திரியும் கோபாலனும் சந்திக்கும் இடங்கள் ஆண் பெண் உறவின் உன்னத உச்சங்களை சொல்கின்றது என்றால் ,சங்கரன் ஷியாமளி உறவு, ஆண் பெண் சறுக்கும் இடங்களையும், அதன் காயங்களையும், வலியையும் சொல்கின்றது. ஒவ்வொரு பெண்ணின் மனத்தில் இருக்கும் கற்பனைகளும், அவை நிறைவேறாதபோது ஏற்படும் சிக்கல்கள் ஒருபுறமும், பெண் என்பவள் எப்படி மாபெரும் சக்தியாக, , நல்ல துணையாக, நம்பிக்கை நட்சத்திரமாக உரு பெற முடியும் என்பது மறு புறமாக, நீரோடை போல் பாலகுமாரனின் கதை செல்கின்றது. ஒரு ஆடவனின் துயரங்கள், மற்றும் பெண்ணின் துயரங்கள் மிக நேர்த்தியா சொல்லப்படும் அதே வேளையில் , அவர்களின் புரிதல் இன்மை எப்படிப்பட்ட உறவு விரிசல்களை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த புத்தகம் கட்டியம் சொல்கின்றது. மழை தாலாட்டும் ஒரு மாலை நேரத்தில், என் மகளின் மகவு என் மடியில் அயர்ந்து உறங்கும் இரண்டு மணி நேரங்களில் மீண்டும் நான் மெர்குரி பூக்களில் முத்து குளித்தேன்.எதிர்பார்ப்பு இல்லாது அன்பு செய்வது ஒன்றே உலகத்தின் அமைதிக்கும், ஆண் பெண் உறவு மேம்படவும் வழி வகை செய்யும் என்ற பதிவு சாவித்ரியின் மூலமாக, கோபாலனுக்கு சொல்வது போல் எல்லோருக்கும் .கூறப்படுகின்றது. தி ஜானகிராமனின் மரப்பசு அம்மணியும் ,மோகமுள்ளின் யமுனாவும் மனதில் வந்து செல்கின்றார்கள்.intha செய்தியும் இதன் தாக்கமும் உடனே intha மின் அஞ்சல் செய்ய உந்தல் செய்தது.யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெருக.

No comments:

Post a Comment