Sunday, July 28, 2013
இதற்கு தானே ஆசை பட்டாய் சம்பத் குமாரா !
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்!!
வள்ளுவன் வாக்கின் சாரம் இப்போது என் பேரன் மூலம் உணர்ந்தேன் .
என் மகனும் மகளும் பேசிய மழலை நான் என் வேலைக்கு கொடுத்த விலையாக என்னால் உணரப் படாமலே போய்விட்டது .இறைவன் கொடுத்த வரமாக இப்போது இன்னுமொரு தருணம்.ஒரு சில ஆனந்த கணங்கள் .
என் பேரன் தவழும் போதும் புரண்டு எழும்போதும் விழும்போதும் ,உணவுக்காக பரபரக்கும் போதும், கொடுக்க ஆரம்பித்த மூன்றாவது கவளத்தில் கெட்டியாக வாய் மூடி கொள்ளூம் போதும், கஷ்டப்பட்டு என் மகள் அவன் வாய் திறந்து ஊட்ட முயலும்போது அவன் வாய் திறந்து சின்னதாக புன்னகை புரியும் போதும் இது பிள்ளையா இல்லை கார் மேககண்ணன் தானா என்ற ஐயம் எழுகின்றது
தூளியில் இருந்து என் குரல் கேட்டு எழுந்து சற்றே தலை வெளியே நீட்டி , சின்ன முறுவல் காட்டி தாத்தா என்று அழைக்கும் அந்த நிமிடம் உலகின் எல்லா சொர்கங்களும் என் காலடியில் !!
அள்ளி அணைத்து கொஞ்சும் போது "கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி , உன்னை தழுவிடிலோ உன்மத்தமாகுதடி " என்ற பாரதியின் கவிதை வரிகள் என்னை நெக்குருக செய்கின்றன.
அவன் மெல்ல மெல்ல அடி வைத்து படி ஏறும் அந்த தருணம் , உள்ளமெல்லாம் அந்த காலடியில் உயிர் சேர்க்கும் தருணம் என்றால் அது மிகை இல்லை.
விஷமங்கள் எல்லாம் மொத்த குத்தகைக்கு எடுத்தவன் அவன். ஆனால் அதே சமயம் தன மாய புன்னகையால் மற்றவர்களை கட்டிபோடும் கண்ணன் அவன் .
அவன் தவழ ஆரம்பித்து சில நாட்களில் உடைத்த பொருட்களுக்கு கணக்கு இல்லை :அந்த மழலை பேச்சால் அம்மா,தாத்தா ,அத்தை,பய் ,ஹாய்,பாத்தி என்று அடுத்த நிமிடம் அந்த உடைந்த பொருட்களுக்கு உயிர் வழங்க அவனுக்கு மட்டுமே தெரியும் !!உடைக்க தானே பொம்மைகள்?
ஓடி வருகையிலே உள்ளம் குளிர்விப்பதும் ஆடி திரியும் போது ஆவி சிலிர்பதும்அவனுக்கு இயல்பாக அமைந்து விட்டன.
மெல்லிய மழை சாரலும் இனிய குழல் இசையும் , நல்ல புத்தகங்களும் ஓடும் நதியும் ,பொங்கும் அருவியும் இறையின் நாமமும் ,அருசுவை உணவும் ஒரு சேர கொடுக்கும் கிடைக்கும் சுகம் இவனை சீராட்டி பாராட்டி உச்சி முகரும்போது ஏற்படுகின்றது .
இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்லும் , ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தாய் என்ற வாக்கும் இவன் தந்தைக்கும் தாய்க்கும் அமைந்து இவன் வையகம் போற்ற வாழ்ந்திட என் பிரார்த்தனைகள் !!
இதற்கு தானே ஆசை பட்டாய் சம்பத் குமாரா என்ற அசரீரி என் மனத்தில் ரீங்கரமிடுகின்றது!
Friday, April 5, 2013
THE PEAK
உச்சம் (peak )
உச்சம் என்பதற்கு பலதருணங்களில் பல உணர்வுகள் வெளிப்பாடாக அமையும்..
பொதுவாக இந்த சொல்லே உணர்வு சார்ந்த சொல் என்று கூறலாம் .ஆனால் ஹாங்காங் ஒரு இடத்தின் பெயராக, இதை குறிக்கின்றது.
காரணப்பெயர் என்று தமிழில் கூறுவதற்கு ஒரு மிகச் சரியான உதாரணம் இந்த பெயர்.
ஆம் ஹாங்காங் நகரத்தின் கட்டிடங்களின் வனப்பையும் ,பிரம்மாண்டத்தையும் , மாலை நேரங்களில் , இந்த நகரம் பொ ட்டும் பூவும் வைத்து அலங்காரம் செய்தது போல், விளங்கும் ஒளி விளக்குகளின் நேர்த்தியும் , அந்த ஒளி கற்றைகள் மேலும் கீழும் அலைந்து பல பிம்பங்களை மாய கண்ணாடி போல் தோற்றுவிக்கும் அறிவியல் ரசனைகளையும் ஒரு சேர பார்க்கவும், முழு நகரத்தின் ஒரு பறவை பார்வை பார்க்க வகை செய்யு ம் விதத்தில் அங்கங்கே நிறுவி யுள்ள தொலை நோக்கிகளும்(எல்லாமே வேலை செய்கின்றன !!) சொர்க்கம் என்று ஒன்று உண்டானால் அது இங்கே தான் என்று பறை சாற்றும் இடம் இந்த peak .
நாங்கள் போய் சேர்ந்த அன்று மாலையே இந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்று முன்னமே திட்டமிட்டபடி ஹாங்காங் FERRY பாயிண்ட்டில் இருந்து ஒரு வாடகை டாக்ஸி மூலம் நங்கள் இன்ஹா இடத்தை சென்று அடையும் போ து மேலே சொன்ன கனவுக்காட்சிகள் நிஜம் பெற்ற நேரம்.
எனக்கும் என் மகனுக்கும் ஒரு வரம் உண்டு(சிலர் இதை படித்த பின் இது வரமா அல்லது சாபமா என்று வியக்கலாம்).நாங் கள் இருவரும் எப்போதெல்லாம் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் எங்கள் ஜாக்ரதை உணர்வு எங்களிடம் இருந்து விடுதலை பெற்று விடு,ம் .இருவரும் குழந்தைகள் போல் சென்று போன நாட்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது எங்களை நாங்களே மறந்து விடுவதும் அதனால் ஏற்படும் அனுபவங்களும் விவரிக்க முடியாது.
முன்னம் ஒரு முறை, , என் மகனின் பாஸ்போர்ட் தொலைந்ததும் பின்னர் ஒரு நாளில் ஆசை ஆசையாக எடுத்த புகை படங்களுடன் கூடிய கேமரா தோழன்தொலைந்து போனதும், இதில் அடக்கம். இம்முறை நாங்கள் peakகில் தவற விட்டது, என் மனைவிக்கு நானே மனமுவந்து!! வாங்கி கொடுத்த குளிர் கண்ணாடிகள் .என் மனைவி அதனால் என் நோக்கத்தில் பழுது கண்டதும் அதை துடைக்க நான் எடுத்த முயற்சிகள் இன்று வரை தொடர்வதும் தனி கதை .
ஆனாலும் இந்த தொலைப்புகள் அந்த கணத்தின் சத்தியத்தையும், அழகையும் அனுபவத்தையும் எந்த வகையிலும் கள ங்க படுத்தி விடாமல் நங்கள் ஒரு மனத்தக பார்த்து கொண்டோம்.
கவிக்கோ பாரதியின் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற கூற்றை நாங்கள் வாழ்ந்து காட்டிய தருணம் அது!
(இனியும் வாழும் தருணங்கள் தொடரும்)
Sunday, March 31, 2013
ஆகாயத்தில் ஏறும் விமானங்கள்
ஆகாயத்தில் ஏறும் விமானங்கள்
(இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங் களுக்கு நன்றியுடன்)
நான் வசித்து வருவது மடிப்பாக்கத்தில்.சென்னை விமான நிலையம் இயங்கி வரும் மீனம்பாக்கம்/திரிசூலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம். சென்னையின் புறப்பகுதிகள் அவ்வளவாக வளர்ச்சி அடையாத சுமார் 30 வருடங்களுக்கு முன், நல்ல காற்றும்.சுவை மிகு குடி நீரும் , பசுமை வயல் பரப்புகளும், பனை மரதோப்புகளும் மடிப்பாக்கத்தின் அடையாளங்களாக இருந்த நேர்த்தியான காலகட்டம் அது.
கா ற்றை மறைக்கும் விண்ணை தொடும் கட்டிடங்கள் இன்னும் உறவு கொல்லா(ள்ளா )த /நேரம் அது.
மா லையும் இரவும் சந்திக்கும் நேரத்தில், தூரத்தில் தெ ரியும் பரங்கி மலை மற்றும் திரி சூல மலைகளின் பின் புலத்தில், தென்றல் வருடிக்கொடுக்க, பஞ்சாயத் ரேடியோவில் மனத வருடும் பாடல்கள் ஒலி பரப்பாக, தரை யில் இற ங்கும் விமானங்களின் அழகு . இந்துமதி அவர்களின் தொடர் கதை படித்தவுடன், இன்னும் மனதுக்கு அருகாமையில் இசை சாரல் தூவ, எதோ ஒரு நாள் என் வாழ்க்கையில் நானும் அதில் பயணி க்க வேண்டும் என்ற கனவு தோன்றிய களம் அது..
சற்றேரக்குறைய சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் என் அலுவல் நிமித்தம் காரணமாக என் முதல் பயணம் சென்னையில் இருந்து தலை நகரமான டில்லிக்கு நான் செல்ல நேரிட்ட போது அந்த முதல் கனவு நிறைவேறியது.அதன் பின்னர் விமான பயணம் என்றாலே ஒ ரு அலுப்பும் சலிப்பும் அற்படும் அளவுக்கு பல பயண ங்கள்.
ஆ னாலும் கோடை கா ல இரவு நேரங்களில், நிர்மலமான ஆகாயத்தில் விண்மீன்களின் கண் சிமிட்டலை ரசிக்கும் நேரங்களில், ஏறும் மற்றும் இறங்கும் விமானங்களின் அழகு மனதை பிரமிக்க வைக்கும்..
பல வருடங்களுக்கு பிறகு 2010ஆம் ஆண்டு ஒரு இரவுபொழுது.என் மகனும் என் மகளும் அவர்களின் எதிர் கால சிந்தனைகளை என்னுடன் பரிமாறிக்கொண்ட நேரம்.சட்டென்று மேலே பார்த்த போது ஒரே நேரத்தில் இரண்டு விமானகள் வெ வ்வேறு திசைகளில் பயணிக்க கண்டேன்.என்னுள் ஒரு குரல் கூறியது.
நான் பார்த்த கா ட்சி இனி வர போகும் காலத்துக்கான ஒரு பதிவு என்று.ஆம் !
என் மகனும் மகளும் வெளி நாடு செல்ல போகின்றார்கள் என்று அந்த கணம் எனக்குள் தோன்றியது ஒர் சத்தியம்..அந்த நிமிடம் முதல் எப்போதெல்லாம் நான் என் நடை பயிற்சிக்காக மொட்டை மாடியில் நடக்க போகின்றேனோ அப்போதெல்லாம் என்னையும் அறியாமல் என் மனமும், பிரார்தனையும் அவர்கள் பயணம் மேற்கொள்ள ஒரு விதையாக ஊன்றி விட்டது.
2010 இறுதியில் என் மகன் ஹாங்காங் பயணமும் என் மகள் 2011 ஆரம்பத்தில் அமெரிக்க பயணமும் மேற்கொண்ட போது அவர்களை வழி அனுப்ப நான் விமான தளம் சென்ற போது மேற்சொன்ன நினைவலைகள் என்னில் படர்ந்தன,
மீண்டும் ஹாங்காங் நகரத்தில் எங்கள் அறைக்கு செல்ல நானும் மனைவியும் என் மகனோடு மின் தூக்கிக்காக காத்து இருந்த அந்த தங்க நிமிடங்களில்
இந்த நினைவுகள் மீண்டும் என்னுள் படர்ந்தன .
(மேலும் படரும் )
(Please visit kodvasri@blogspot.com (Ignorance is bliss)for all posts related to my recent Hongong visit sofar)
Sunday, March 24, 2013
Hongkong- a beautiful fower
ஹாங்காங் ஒரு மனோ ரஞ்சிதம்
மனோ ரஞ்சிதம் என்று ஒரு பூ உண்டு. அந்த பூவின் ஒபெயர் ஒரு காரணப்பெயர்..எந்த வசனி மனதில் நினைத்து அந்த பூ முகர படுகின்றதோ அந்த வாசனை அந்த பூவில் இருந்து கிடைக்கும் என்பார்கள்.
ஹாங்காங் நகரம் என்னை பொருத்தவரை ஒரு மனோ ரஞ்சிதம். எந்த தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அந்த நகரத்தை பார்கிறோமோ அந்த அனுபவம் கொடுக்கும்.நகரம்.
பென்ஸ் விமான தளம் விட்டு வெளியே வந்த போது . சரேலென்று மேலே தூரத்தில் எழுந்த மலைகள், இதமாக அதில் இருந்து வீசிய தென்றல் , கீழே படுக்கை விரித்து படுக்கவும் சாப்பிடவும் தூண்ட கூடிய அளவுக்கு அழகான அளவான அம்சமான சாலைகள், அதில் பயணிக்கும் ஊர்திகளின் வேக கட்டுப்பாடு, சாலை விதிகள் கடை பிடிப்பதில் அவர்களுக்கு உள்ள ஒழுங்கு, பக்கத்திலேயே தொடர்ந்து வரும் அதி வேகமான விமான தளத்தை நகரத்துடன் இணைக்கும் சிறப்பு ரயில் , அந்த பாதை நெடுகிலும் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டு கண்காணிக்கும் உயர் தரமுள்ள காமிராக்கள் , எங்கே இருக்கிறோம் என்று கா ட்டி கொள்ளாமல் , அதே சமயம் தேவை படும் போது சட்டென்று உதவி செய்ய வரும் காவலின் அம்சங்கள், திடீரென்று உயர்ந்து பிரமிக்க வைக்கும் தொங்கு பாலங் கள், சட்டென்று கதகதப்பை கொடுக்கும் , கடலுக்கடியில் செல்லும் நீண்ட சுரங்க பாதைகள் , அந்த சுரங்க பாதைகளின் இரு மருங்கிலும் மாசு மருவில்லாமல் துவங்கும் சுவர்களின் பளிச் , இரவை பகலா க்கியது போல் மின்னும் ஒளி விளக்குகள் பயணம் முழுவதும் எங்கும் முழங்காத ஹாரன் சப்தம் ......ஆம் அந்த மாயன் படைத்தானோ என்று வியக்க வைக்கின்ற நகரத்தில் நுழையு முன் ஏற்படுகின்ற அனுபவங்கள் இவை !!
கிராஸ் பா ர்டர் குகை சாலையும், TSIMTSATSUI சிட்டியும் என் மகன் இ ருப்பிடம் அருகில் வந்து விட்டது எ ன்று கட்டி யம் கூற ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலை கழகம் இன்டர்நேஷனல் GUEST ஹவுஸ் வாசலில் எங்கள் கார் அமைதியாக சென்று நின்ற அந்த நி மிடம், என் மகனின் இன்னொரு முயற்சிக்கு ஆதரவும் அணைப்பும் கொடுத்த அந்த கட்டிடம் எனக்கு செங்கல் கட்டிடமாக தெரியவில்லை.அன்பும் அமைதியும் ஆற்றலும் அளிக்கும் ஒரு கோவிலாக அதை நான் தரிசித்தேன் .!!
(இன்னும் தரிசிப்பேன்)
Friday, March 22, 2013
FEW QUESTIONS AND ANSWERS-MY HONGKONG JOUNEY -CONTINUED!
கேள்வியு ம் பதிலும்
நான் ஹாங்காங் போவதற்கு முடிவு செய்த நிமிடம் முதல் போ ய் சேர்ந்து மீண்டும் சென்னை வந்து சேரும் வரை மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பல. அவற்றில் சில இங்கே .
இந்த பயணம் என் இவ்வளவு அவசரஅ வசரமாக மேற்கொள்ளப்பட்டது/
என் 4 நாட்களுக்காக மட்டுமே ஒரு பயணம்/
வேறு எந்த இடங்கள் செல்லப் போகின்றேன்/
இந்த பயணம் என் சொந்த பயண மா அல்லது யாராவது இந்த செலவு ஏற்றுக் கொள்கின்றார்களா /
சில கேள்விகள் உண் மையில் கரிசனத்துடன் கேட்கப்பட்டவை. , வேறு சில என்னை ஆழம் பார்க்கும் கேள்விகள்.,
ஆயி னும் நான் என் சுயம் காத்தேன்.என்னை பொறுத்தவரை இந்த பய ணத்தின் முழு நோக்கம் என்னை வளர்த்த என் சகோதரி என்னுடனும் என் மனைவியு டனும் வந்து என் மகனை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதும், எங்கள் இந்த பயணம் என்னுடைய மகனின் முக்கிய ஒரு கால கட்டத்தில். அவனது அறிவு தேடல் பயணத்தில் , ஒரு புத்துணர்வு சேர்க்கவும், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் அவனை சார்ந்து இருக்கின்றன என உணரவும் உணர்த்தவும் மட்டுமே.
PhD ஆய்வு படிப்பு என்பது படிப்பவர்கள் எல்லோரையும் ஏகலைவனாக மாற்றும். ஒரு வித்யாசம்,,இங்கே ஆதர்ஷ புருஷர்களாக துரோணரும் இல்லை.தகப்பன் சாமியும் இல்லை.
.
தானே கேள்வி தானே பதில் , தானே தன்னை ஊக்குவித்து கொண்டும் தானே தன சருக்கல்களில் இருந்து மீண்டு சுதாரித்து கொண்டும், பகிர்ந்து கொள்வதற்கு பல நேசங்கள் இல்லாத போதும் இருக்கும் சிலரிடம் அளவோடு பேசி தன்னை தானே உருவாக்கி கொண்டு பயணம் செய்யும் ஒரு மாபெரும் வேள்வி இது.
இந்த பயணம் முடியும் போ து வரும் பரிசுகள் பாராட்டுகள் அனைவரும் அறிவர். ஆனால் கடந்த மைல் கற்கள் ,அனுபவித்த வலிகள் பலரும் அறியாதவை அதிலும் ஹாங்காங் போன்ற ஒரு வெளி நாட்டில் (இந்திய வம்சாவழியும் அதிலும் தமிழ் பேசும் உற்றமும் சுற்றமும் மிக குறைவாக இருக்கின்ற ஒரு இடத்தில் ) இந்த தேடலின் வீரியமும் ,பரிமாணங்களும் அளவிட முடியாதவை.
அந்த பயணத்தில் எங்கள் அனைவரின் பக்க பலமும் அந்த தேடலில் ஈடு பட்டுள்ள என் மகனுக்காகவே உ ள்ளன என்று உணர்த்தவே இந்த பயணம் .
பென்ஸ் காரில் ஏறி உட்கார இருந்த சில நிமிடங்களில் மனதில் தோன்றியவை இவை!!
(இன்னும் தோன்றும் )
Wednesday, March 20, 2013
சில பார்வைகள் பல அர்த்தங்கள்
விமான பறவை தன சிற குகளை மூடி தன கதவுகளை திறந்த அந்த நிமிடம் ஓடும் கூட்டத்துடன் கலந்து விடாமல் அந்த அனுவத்தை மனதில் தேக்கி நிதானமாக, பொருட்களை எடுத்து கொண்டு என் மகனை காணும் கணத்துக்காக மிக ஆவலுடன் கண்கள் அலை பாய தொடங்கின..
நகரும் படிகளை (escalator ) அணுகியபின் தான் என் தமக்கைக்கு அதில் ஏறி பழக்கம் இல்லை என்பது மனதில் உரைக்க என்ன செய்வது என்று எண்ணிய வேளையில் ஏர்போர்ட் ஊழியர் அருகே இருந்த மின் தூக்கியை சுட்டி கா ட்ட ஹாங்காங் தன சுற்றுலா பயணிகளின் தேவை அறிந்து உதவும் பண்பு மனதில் மழை சாரலாக விழுந்தது.
சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் எங்கள் உடைமைகள் அனைத்தம் எடுத்து கொண்டு சற்றும் மாறாத
அந்த இயந்திரத்தனத்துடன் கூடிய immigration ஆய்வுக்கு பின் வெளியே வரும் போது கனவு பார்வையுடன்(எங்கள் கனவுகளை நிறைவேற்றும் பார்வை) என் மகனும் கடமை பார்வையுடன் எனக்காக அனுப்பப்பட்ட ஓட்டுனரும் காத்திருந்த வாயில் கண்ணில் பட்டது. ஒரு சேர ஐந்து ஜோடி உதடுகள் புன்னகைக்க, ஐந்து ஜோடி கண்கள் ஒன்றோடு ஒன்று பல செய்திகள் அறிவிக்க அந்த கணம் நிஜமான நிறைவாக மனதில் இறங்கியது..
அதிகம் பேசாமல் வெளியே வந்து சேர அழகான அந்த கருப்பு நிற BENZ வெண்ணை போல் அருகே வந்து நிற்க அது வரை பூட்டப்பட்ட வார்த்தைகளும் அனுபவங்களும் ஒரு சேர ஒரே நேரத்தில் வெளி வரத்தொடங்கின.
(மேலும் வரும்)
Tuesday, March 19, 2013
a thosand flowers bloom
cathay பசிபிக் விமானம் 7.3.2013 அன்று சென்னை விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் கிளம்பியபோது உள்ளம் எல்லாம் ஒரு பிரகாசம். இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஆனந்தம்.முதல் குழந்தை மிமுத்தமிடும் போதும் முதல் காதல் சொல்லபப்டும் போதும் தோன்றும் உல்லாசம் என பல உணர்வுகளின் சங்கமம்.விமானம் தாதரை விட்டு வேனில் எழுந்த அந்த கணம் உடலில் ஒரு புல்லரிப்பு.
அருகே மனைவியும் என் மூத்த சகோதரியும் அமர்ந்திருக்க என் இந்த புதிய முகம் அவர்களுக்குள் ஒரு ஆச்சரியம் தோற்றுவித்திருக்கும்/அந்த உணர்வு பரவச நிலை சற்றே தாலாட்ட கண் அசந்த நேரம் விமான ப ணி பெண்ணின் இனிய குரல் என்னை எழுப்பியது.
நேரம் பார்க்க கடிகாரத்தின் கா ந்த முள் காலை 5.30 எனக் காட்டியது. எதற்காக இவ்வளவு காலை வேலையில் எழுப்பப்பட்டேன் என்று உணரும் முன்னமே சுடசுட பரிமாறப்பட்ட இட்லியும் , அது ஊறி திளைத்து இ ருந்த சாம்பாரின் மண மும் ,சேமிய உப்புமாவும்,அதன் துணை வந்த கா ர சட்னியும் , இவை எல்லாவற்றுக்கும் மேல் மண ம் பரப்பி வந்த coffee மனமும் ஒரு சேர, புலன்கள் அனைத்தும் எழுப்பி விட, அப்போது தான் அது காலை உணவு என்பதும் , பறந்து கொண்டிருக்கும் நாட்டின் நேரம் காலை 8 மணி என்பதும் ஒரு சேர நினைவுக்கு வந்தது.
நல்ல வேளை , விமானம் புறப்படும் முன் நாங்கள் மூவரும் காலை கடன்களை நிறைவேற்றி இருந்ததால் அந்த உணவு அந்த அதி காலை வேளையில் ஒரு நல்ல துவக்கம் ஆக அமைந்தது . இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஹாங்காங் வந்து விடும் என்ற எண்ணம் மனதில் பட்டா ம் பூச்சி பறக்க விட்டது என்றால் மிகை இல்லை.
அதற்கு முன்னர் எனது ஹாங்காங் பயணங்கள் எல்லாம் சிங்கப்பூர் அல்லது மலேசியா மூலமே இருந்தது என்பதால் அதிகாலை வேளை அங்கே இறங்கி, சற்றே அந்த விமான நிலையங்களின் அழகில் மனம் தோய்ந்து பின்னர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் ஹாங்காங் அடைவது வழக்கம் .ஆனால் இந்த மு றை எனது வயதான சகோதரி என்னுடன் வந்த காரணத்தால் நேராக சென்னை ஹாங்காங் பயணம் தரவு செய்தேன், மேலும் 5 மணி நேரத்தில் என் மகனை பார்த்து விட முடியும் என்ற எண்ணமும் இந்த தேர்வுக்கு கார ணம்.
இவற்றை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் விமானம் தரை இறங்க போகின்றது என்ற அறிவிப்பு செவியில் தேனாக பாய்ந்தது
சரியாக ஹாங்காங் நேரம் 10/35 மணி அளவில் விமானம் தரை இறங்கியது
ஆயிரம் தாமரை மொட்டுக்கள் என் மனதில் , ஒரு சேர பூத்து குலூங்கின!!
(மீண்டும் பூக்கும் ).
Subscribe to:
Posts (Atom)