Friday, April 5, 2013
THE PEAK
உச்சம் (peak )
உச்சம் என்பதற்கு பலதருணங்களில் பல உணர்வுகள் வெளிப்பாடாக அமையும்..
பொதுவாக இந்த சொல்லே உணர்வு சார்ந்த சொல் என்று கூறலாம் .ஆனால் ஹாங்காங் ஒரு இடத்தின் பெயராக, இதை குறிக்கின்றது.
காரணப்பெயர் என்று தமிழில் கூறுவதற்கு ஒரு மிகச் சரியான உதாரணம் இந்த பெயர்.
ஆம் ஹாங்காங் நகரத்தின் கட்டிடங்களின் வனப்பையும் ,பிரம்மாண்டத்தையும் , மாலை நேரங்களில் , இந்த நகரம் பொ ட்டும் பூவும் வைத்து அலங்காரம் செய்தது போல், விளங்கும் ஒளி விளக்குகளின் நேர்த்தியும் , அந்த ஒளி கற்றைகள் மேலும் கீழும் அலைந்து பல பிம்பங்களை மாய கண்ணாடி போல் தோற்றுவிக்கும் அறிவியல் ரசனைகளையும் ஒரு சேர பார்க்கவும், முழு நகரத்தின் ஒரு பறவை பார்வை பார்க்க வகை செய்யு ம் விதத்தில் அங்கங்கே நிறுவி யுள்ள தொலை நோக்கிகளும்(எல்லாமே வேலை செய்கின்றன !!) சொர்க்கம் என்று ஒன்று உண்டானால் அது இங்கே தான் என்று பறை சாற்றும் இடம் இந்த peak .
நாங்கள் போய் சேர்ந்த அன்று மாலையே இந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்று முன்னமே திட்டமிட்டபடி ஹாங்காங் FERRY பாயிண்ட்டில் இருந்து ஒரு வாடகை டாக்ஸி மூலம் நங்கள் இன்ஹா இடத்தை சென்று அடையும் போ து மேலே சொன்ன கனவுக்காட்சிகள் நிஜம் பெற்ற நேரம்.
எனக்கும் என் மகனுக்கும் ஒரு வரம் உண்டு(சிலர் இதை படித்த பின் இது வரமா அல்லது சாபமா என்று வியக்கலாம்).நாங் கள் இருவரும் எப்போதெல்லாம் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் எங்கள் ஜாக்ரதை உணர்வு எங்களிடம் இருந்து விடுதலை பெற்று விடு,ம் .இருவரும் குழந்தைகள் போல் சென்று போன நாட்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது எங்களை நாங்களே மறந்து விடுவதும் அதனால் ஏற்படும் அனுபவங்களும் விவரிக்க முடியாது.
முன்னம் ஒரு முறை, , என் மகனின் பாஸ்போர்ட் தொலைந்ததும் பின்னர் ஒரு நாளில் ஆசை ஆசையாக எடுத்த புகை படங்களுடன் கூடிய கேமரா தோழன்தொலைந்து போனதும், இதில் அடக்கம். இம்முறை நாங்கள் peakகில் தவற விட்டது, என் மனைவிக்கு நானே மனமுவந்து!! வாங்கி கொடுத்த குளிர் கண்ணாடிகள் .என் மனைவி அதனால் என் நோக்கத்தில் பழுது கண்டதும் அதை துடைக்க நான் எடுத்த முயற்சிகள் இன்று வரை தொடர்வதும் தனி கதை .
ஆனாலும் இந்த தொலைப்புகள் அந்த கணத்தின் சத்தியத்தையும், அழகையும் அனுபவத்தையும் எந்த வகையிலும் கள ங்க படுத்தி விடாமல் நங்கள் ஒரு மனத்தக பார்த்து கொண்டோம்.
கவிக்கோ பாரதியின் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற கூற்றை நாங்கள் வாழ்ந்து காட்டிய தருணம் அது!
(இனியும் வாழும் தருணங்கள் தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment