Pages

Wednesday, April 20, 2011

TO MY FIRST AND PRESENT AND FUTURE LOVE

அன்பிற்கினியவளே
உனக்கு என் வாழ்த்துக்கள்
உன் பிறந்த நாட்கள்
நான் மீண்டும் பூக்கும் நாட்கள்

பரிசு எதை தருவது
எது உனக்கு ஈடாகும்!
தமிழின் கவிதை ஒன்றே
ஈடில்லா பரிசாகும்!!

ஐம்பது வருடங்கள்,
ஐம்பது வசந்தங்கள்,

பிறந்தது முதல்
நடை பழகியது முதல்
பூப்படைன்தது முதல்
நேசம் சொன்னது முதல்

நிலை மாறியது முதல்
அரவணைத்தது முதல்
அழுதது முதல்
கலந்தது முதல்

பிரிந்தது முதல்
பின் இணைந்தது முதல்
உறக்கம் மறந்தது முதல்
உணர்வு நெகிழ்ந்தது முதல்

பிள்ளை முகம்
பார்த்தது முதல்
பெண்ணின் கண்
நோக்கியது முதல்

அன்பு செலுத்தி அரவணைத்து
தவறு களைந்து தன்னில் கரைந்து
செய்யும் உணவில் பாசம் கலந்து
சொல்லும் சொல்லில் நேசம் கலந்து

இருந்தபடி இரு
இயல்பாய் இரு
இனிமையாக இரு
என்றும் எம்முடன் இரு.

நெஞ்சமெல்லாம் காதலே
நினைப்பதும் நின்னையே
சக்தி நீயடி எந்தன்
சக்தியும் நீயடி.

என்றென்றும் அன்புடன்
எப்போதும் அன்புடன்
உன் அன்பன்

2 comments:

  1. Fine poem, free flowing with sensational thoughts... lovely read Mama.

    ReplyDelete
  2. Hi Ramesh,

    Thank you. Trust every thing is fine at yr end.
    mama

    ReplyDelete