Pages

Thursday, September 12, 2013

CHENNAI BATTERED BY RAINS


Chennai ATLAST HAD WELCOME RAINS.
It carries as usual its own follies.Obviouly
not that of rains but those of man made.
As a lover of rains I have become a child at heart
on seeing those silver sheets making bridges
between sky and the earth and the resultant effect is
as under
மழை
மேகங்கள் வழங்கும் அமுதம்
ஆகாயக் காதலன் அனுப்பும் தூது
பூமி பெண்ணை அணைக்கும் கரங்கள்
சில்லென்று  மனம் கவ்வும் ஆயுதம்

மழை
நல்லார் ஒருவர் உள்ளார்
என உணர்த்தும் வள்ளுவம்
வாடிக் கிடக்கும் பாலை வனம்
சூடும் சோலையாக மாற்றும் தனம்

மழை
எப்போது வரும் என்று காத்து
ஏன்  வந்தது என்று கேட்கும்
மனித மனங்களின் வினோதம்
கடந்து போகும் புனிதம்

மழை
சாலைகளை ஆறாகவும்
ஆறுகளை கடலாகவும்
மேருவை சிறு மலையாகவும்
மாற்றம் செய்யும் சூத்திறம்

மழை
போற்றுவர் போற்றலும்
தூற்றுவர் தூற்றலும்
போகட்டும் பரமனுக்கே
என்று கடந்து செல்லும் அதிசயம்

1 comment:

  1. Appa,

    The third and fourth stanzas are brilliant - simple yet powerful. And beautiful, too! :)

    ReplyDelete