Pages

Monday, August 15, 2011

independence day- a few thoughts of a friend

திரு. சுப்பிரமணியன்
கடந்த பதிைனந்து ஆண்டுகளாக ஹாங்காங்கில் வசித்து வரும் இந்தியர். ஆயத்த
ஆைடகள் வாங்கி விற்கும் ஒரு நிறுவனத்தின் ேமலாளர்.
அவரது பள்ளி படிப்பு திருெநல்ேவலியில் தொடங்கி நாகர்கோவில் மற்றும்
ெச ன்ைனயில் நடந்ேதறியுள்ளது. ஆக தமிழ்நா ட்டின் பல ப குதிகைளப் பற்றி
அறிந்து ைவத்துள்ள அவர்
கைடசியில் ேவைல பார்த்ெதன்னவோ ெசன்ைனதான்.
ெசன்ைனயில் மயிலாப்பூரில் வசித்து வந்த அவருக்கு ஹாங்காங் ஒரு அைசவ
காடு. ைமயிலாப்பூரின் ஒவ்வொரு ெதருைவயும் சிலாகிக்கும் அவருக்கு ஹாங்காங்
இப்பொழுது பழகிப் போனது ஆச்சரியம் தான்.
அனுபவம்.
திைர கடல் ஓடியும் திரவியம் ேதடு. !! ேதடத் துவங்கிய நாளின் வலியும், ேதசம்
துண்டித்து உறவுகள் துண்டித்து பழகிய அைனத்தும் மறந்து அன்னிய ேதசம்
ெசல்லும் அந்த நாளின் பயமும் பாரதி அறிந்திருக்க மாட்டான்.
இருப்பினும் ேதடல் தாேன வாழ்க்ைக. அப்படி ஒரு பதிைனந்து ஆண்டுகள் ஓடி
விட்டன ெசன்ைனைய விட்டு சீன ேதசம் ெசன்று.
ஹாங்காங் சீனாவின் மகுடம் என்பது மறக்க முடியாதது. இருப்பினும் அந்த
வாழ்க்ைக முைற சீனர்களின் வாழ்க்ைக முைறதான். அைசவமாகட்டும், ஆங்கிலம்
ேப சத்ெதரியாமல் உயிைர வா ங்குவதாகட்டும் … அது ஒவ்வொரு நிமிடமும் சீன
ேத சத் ைத நிைனவூட்டிக் கொண்ேட இருக்கும்.
ஹாங்காங்கின் ஒவ்வொரு அைசவும், ஒவ்வொரு வளர்ச்சியிம் என்னுள் ஒரு
நீங்காத ஏக்கத்ைத ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நம்ம ஊரில் எப்போது இப்படி
வரும் ???
ஹாங்காங்கில் அடிெயடுத்து ைவத்த வருடம். 95. அப்போது இந்தியாவில்
மொ ப ை ல் போன் அறிமுகப்படுத்தப் பட்ட புதிது. ஹாங்காங்கின் எழுபது லட்சம்
மக்கள் தொைகயில் ஏறக்குைறய தொண்ணூறு சதவிகிதம் ைக தொைலேபசி
வை த்திருந்த காலம்.
நம்ம ஊரில் ஒரு நிமிடத்திற்கு இருபது ரூபாய் பதிெனட்டு ரூபாய் என்று
கட்டணம். எம்.எல்.ஏ எம்.பி சினிமா நடிகர்கள் அல்லது ெபரும்
தொழிலதிபர்கள் மட்டுேம ைக தொைல ேபசி ைவத்திருந்த காலம்.
ஹாங்காங் பார்த்து ஒரு குற்ற உணர்ச்சிேய எழும் அப்போது.
இன்று பதிைனந்து ஆண்டு கழித்து இந்தியாவில் இறங்கும் போது நிைல
கொள்ளாத ெபருைம. நைடபாைத இஸ்திரி வண்டிக்காரர் கூட
ைக த் தொைலேப சியில் ஆர் டர் எடுக்கிறார்.
என் ேதசத்ைத அதன் நீளத்ைத தூரத்ைத தொழில் நுட்பம் சுருக்கி விட்டது
பிரமிப்பூட்டுகிறது. மக்களின் வாழ்க்ைக முைற (அது நல்லதோ ெகட்டதோ ேவறு
பிரச்சிைன) ஏகத்திற்க்கும் மாறியுள்ளது.
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் இன்று உலக நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு
மாறியுள்ளது. உலக மயமாக்கல், வர்த்தகம் என்று பரந்து விரிந்த விஷயத்திற்குள்
போகாமல் என் வைர உள்ள சின்ன சின்ன ஆச்சரியங்கள்….
1. பிரயாணம். பதிைனந்து ஆண்டுகளுக்கு முன் அப்பாவின் அரசாங்க எல்.டி.சியில்
கன்யாகுமரியிலிருந்து ெசன்ைன வைர வர முடியும் அவர் தமிழ்நாட்டு அரசு
அதிகாரியாக இருந்ததால்… அதுேவ ஒரு மத்திய அரசு அதிகாரியாக இருந்தால்
கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வைர போக முடியும். தனியார் நிறுவனத்தில்
ேவ ைல பார்த்திருந்தா ல் இந்த வசதி உத்திர வாதமில்ைல.
இன்று சுற்றுலா விடுமுைற என்றால் என் நண்பர்கள் ெவளிநாட்டுக்கு
வருகிறார்கள். இது காசு மட்டும் ெசலவு பண்ணக்கூடிய ஒரு வசதி வாய்ப்பு
ெப ருகிய சூழல் மட்டும ன்று.. அவர்க ளின் பார் ைவ, பிரா யா ணம் குறித்த அவர் க ளின்
நோக்கம் விசாலமானதும் காரணம். இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின்
ெச லவுெ ச ய்யும் ம னம் விரிவைடந்திருப்ப து ஒரு ெபரிய ஆறுதல். ( என்னுைடய
காலத்தில் புலம் ெபயர்ந்த தமிழர்களின் மனம் மட்டும் அந்த காலத்திேலேய
இருப்பது மட்டும் சோகமான விஷயம். நம்ப முடியாதவர்கள் சான்றுக்கு பல்ேவறு
நாடுகளின் தமிழ்ச் சங்கங்கைள அணுகவும்)
2. காணி நிலம். ஒவ்வொரு இைளய தைல முைறயினரும் தனக்ெகன சின்னதோ
ெப ரிய தோ ஒரு வீடு வா ங்க ேவ ண்டும் எ னும் ஒரு தூண்டுதல். ரியல் எஸ்ேடட்
எனும் அரக்கன் இந்தியாவின் மூைல முடுக்ெகல்லாம் புகுந்து என் மக்கைள
பயமுறுத்தி ஒரு விளிம்புக்கு கொண்டு விட்டது ெதரிகிறது. நானறிந்து
துைரப்பாக்கதில் ஒரு பூர்விக நிலம் நாலு கிெரளண்டோ ஐந்து கிெரளண்டோ
அந்த காலத்தில் (அந்த காலத்தில் என்று நான் குறிப்பிடும் போெதல்லாம்
அறுவதோ அல்லது எழுவதோ என்று கற்பைன ேவண்டாம்… ஒரு பத்து அல்லது
பன்னிரண்டு வருடம். முன்னர் மட்டுேம) எங்கள் வீட்டருேக மயிலாப்பூரில் ஒரு
மாமா ைவத்திருந்தார். உங்களுக்ெகன்ன மாமா, நிலெமல்லாம் இருக்கிறது
என்றால் அட போடா… அங்க மனுஷன் போவானா புதர்காடு என்று புலம்பிய
அவருக்கு அது கோடிக்கணக்கில் போகும் என்றோ பத்து வருடங்களில்
அவருைடய மகன்கள் அந்த நிலத்தினால் மட்டுேம பி.எம்.டபுள்.யூ காரில்
போவார்கள் என்றோ கற்பைனகூட வந்திருக்க வாய்ப்பில்ைல.
அன்று எங்கள் அப்பா யோசிக்காதது அவருைடய அப்பா யோசிக்காதது.. இைளய
தைல முைற யோசிக்கிறது. காணி நிலம் ேவண்டும். அது நகரத்ைத விட்டு நூறு
கிலோ மீட்டர் இருந்தாலும் வாங்கி போட ேவண்டும்.
வரேவற்கத்தகுந்த விஷயம். சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் குடி மக்கள்
சொந்த வீடு ைவத்திருப்பைத அரசு விரும்புகிறது.
3. தகவல் தொழில்நுட்பம்.
என்பீல்டு தொைலக்காட்சி தொடங்கிய காலம். (முடிவுற்ற காலமும் ஒரு
ேச ரத்தா ன் என்ப து எங்க ளுக்கு அப் போது ெதரியா து) உறவினர் ஒருவர்
இருந்ததால் அந்த தொைலக்காட்சிைய வாங்கி வந்து விட்டார் அப்பா
அதன் ட்யூனிங் டயல் முைற. அதாவது பட்டன் இல்லாத காலம். ஒரு குழாய் போல
திருப்ப ேவண்டும். தூர் தர்ஷன் ெதரிவதற்க்குள் காலாண்டு பரீட்ைச முடிந்து
விடும். மிஞ்சிப்போனால் ஒரு பன்னிரண்டு சானல் பார்க்கலாம்.
ஏம்ப்பா.. இதில கொஞ்சம் சானல் தான்பா பார்க்க முடியும்… என்று அப்பாவிடம்
சண்ைட போடுவோம். எனக்கு இரண்டு சானல் ேமல இந்தியால காட்டு
என்பார்.
இன்று ைக வலிக்க குழாைய திருப்பிக் கொண்ேட இருந்தாலும் சானல் லிஸ்ட்
மட்டும் ஓயாது. ஹாங்காங்கில் கூட பிரத்ேயகமாக வாங்கி ைவத்திருந்தால்
மட்டுேம பல சானல் பார்க்க முடியும் என்றிருக்க…
இந்தியா முழுக்க சானல் விரவியிருப்பது ெதரிகிறது…இந்த சானல் கொடுத்த
பரிமாணம் ஒவ்வொரு இந்தியனிலும் தமிழனிலும் ெதரிகிறது…
FOOD COURT தொடங்கி சகல இடங்களிலும்.. ஆண் ெபண் உறவுகளின்
அைடயாளங்கள் ஏகத்துக்கும் மாறிப் போய் விட்டன. முன்ெபல்லாம்
தூரத்திலிருந்து பார்த்து ைசட் அடித்த ைபயன்கள் இப்போது ேநேர அருேக
ெச ன்று காபி சாப்பிடலாமா ? என்று ைதரியமாக ேகட்கிறார் கள்.
4. கல்வி.
கல்வி குறித்து ஒரு உரத்த சிந்தைன வந்து விட்டது ெதரிகிறது. முன்ெபல்லாம்
படி படி என்று கணக்கு பரிட்ைசக்குகூட சத்தம் போட்டு படிக்கச் சொல்லும்
அம்மாக்கள் இப்போது , பிற மொழி வகுப்புக்களுக்கு குழந்ைதகைள
சே ர்க்கிறார்கள். தமிழ் ஆங்கிலம் த விர பிற மொழிகள் கற்ப து குறித் து ஒ ரு
விழிப்புணர்ச்சி ஊெரங்கும். இன்று வைர ஹிந்தி கற்றுக் கொள்ளாதது
ஹாங்காங்கில் கூட ஒரு குைறயாகேவ உள்ளது.
திராவிட கட்சிகளின் ேபரன்கள் ஹிந்தியில் ேபசுவைத பார்க்கும் போது எங்கள்
அப்பாவும், சித்தப்பாவும் ஶ்ரீ வில்லிபுத்தூரில் ஹிந்தி பலைககளில் தார் பூசியது
நிைனவிற்க்கு வருகிறது. தார் பூசியது திராவிட கழகங்கள்
மக்கள் மீது தான் என்று உணரும் போது அப்பா இன்று இல்ைல. உலகிேலேய
அதிகம் ேபசப்படுவது சீன மொழி என்றும், இரண்டாவதாக ஆங்கிலத்ைதயும்
மிஞ்சி ஸ்பானிய மொழி என்பது இன்று மாணவர்கள் நன்றாகேவ
உணர்ந்திருக்கிறார்கள்.
முன்ெபல்லாம் மூைலக்கு மூைல ைடப் ைரடிங் இன்ஸ்டிடுயூட் இருக்கும். ஒரு
முைற ஹாங்காங்கில் என்னுைடன் ேவைல பார்க்கும் சீன நண்பர்களிடம் நீங்கள்
எங்ேக ைடப் ெசய்ய கற்றுக் கொண்டீர்கள் என்று ேகட்ேடன்.
கற்றுக் கொள்ளவா ?? இெதல்லாம் எங்கள் பாடத்திட்டத்தில் எட்டாவது படிக்கும்
போேத உண்டு என்றார். இன்று நம்மூரில் ைடப் ைரடிங் இன்ஸ்டிடுயூட்
காணாதைதப் பார்த்து நம்மூர் பள்ளிகளிலும் அது போல வந்து விட்டது என்று
சமாதானப்படுத்திக் கொள்கிேறன்.
சமச்சீர் ேவடிக்ைககளினால் மாணவர்களுக்கு சில வாரங்கள் படிப்பு
பாதிக்கப்பட்டாலும், அது குறித்த ெதளிவு வந்து விட்டது ஆறுதல் தான்.
5. இனளஞர்கள் இன்று
என்னொடுத்த இைளஞர்கள் அரசாங்க உத்தியோகத்திற்கு மட்டுேம முயன்று
கொண்டிருந்த காலம் போய், இப்போது என் மாமா ைபயன் அரசாங்க
உத்தியோகம் ேதைவயில்ைல தனியார் ேவைல தான் ேவண்டும் என்று அடம்
பிடிக்கிறான். இைதயும் தாண்டி பல ேபர் சமூக ேசைவ தொண்டு நிறுவனங்கள்
துவங்குவது இன்னமும் ஆச்சரியம். யோகா, உடற்பயிற்சி என்று நாங்கள்
யோசிக்காத பல விஷயங்கள் இன்று இன்றியைமயாததாக
இனளஞர்கள் உணர்கிறார்கள். அப்பாவு கிராமணி ெதருவிலிருந்த சன் ஜிம்
என்ற உடற்பயிற்சி நிைலயத்ைத அப்போெதல்லாம் கடக்கும் போது இது
கட்டுமஸ்தான, படிக்காத, கொஞ்சம் சமூகத்திற்கு லாயக்கில்லாதவர்களுக்கான
இடம் என்ற எண்ணம் எனக்குள் எழுவதுண்டு. இன்று டெரட் மில் பத்து
பதிைனந்து ைவத்து ஜிம் ெதருவிற்கு ெதரு வந்து விட்டது. ெமன்பொருள்
எழுதும் இனளஞர்கள் காைலயில் ஒேர இடத்தில் ஒரு மணி ேநரம் நடந்து விட்டு
கடந்து ெசல்கிறார்கள்.
6. பிராண்ட் மோகம்.
தீபாவளிக்கு முதல் நாள் ைடலர் கைட வாசலில் காத்திருந்த அனுபவங்கள்
ஏராளம். அன்று ைதயக்காரர் ெதய்வமாக ெதரிவார். அப்பாவுடன் கூட்டுறவு
கைடயில் வாங்கிய துணிைய அவர் தீபாவளி ெடட் ைலனுக்குள் ைதத்துக்
கொடுக்காமல் ேநரம் கடத்த… உள்ளுக்குள் அவைர அத்தைன
வார்த்ைதகளாலும் திட்டிய பாவம் தான் இன்று லட்சம் லட்சமாக துணி ஏற்றுமதி
ெட ட்ைலன் போது ஏற்படும்ெ ட ன்ஷனுக்கு கார ணம் என்று தோன்றும்.
இப்போெதல்லாம் ைடலர் கைடகேள கண்ணுக்கு ெதரிவதில்ைல. எல்லோரும்
ஆயத்த ஆைடகைளேய வாங்குகிறார்கள். அது மட்டுமல்ல சட்ைடக்குள் என்ன
எழுதியிருக்கிறது என்று கூட பார்க்காமல் நாங்கள் தீபாவளிக்கு கூட துணி
அணிந்த காலம் போய் , இப்போது ப்ராண்ட் ெதரியாமல் அண்டர் ேவர் கூட
விற்க முடியாது. ஆறு வயது சிறுவர்கள் கூட தொைலக்காட்சியில் ெதரியாத
ப்ராண்ட் என்றால் ெதரு முைன நாய் போல அந்த துணிகைள பார்க்கிறான்.
ேவ ட்டிக்கு கூட பிரபலங்கைள அைழத் து தா ன் விளம்பரப்படுத்தி விற்க
ேவ ண்டியிருக்கிற து.ே வ ட்டில என்ன பா ஷன். ெதரியவில்ைல.
7. வாகனம்.
அரசு பஸ்களிலும், கல்லூரிக்கு ைசக்கிளிலும் நாங்கள் ெசன்று கொண்டிருந்தது
போக இப்போெதல்லாம் அரசாங்க ேபரூந்துகைள நம்பி நம் இைளஞர்கள்
இல்ைல. ஒவ்வொருவரும் தனியாக ைபக் ைவத்திருப்பது,
ேப னா ைவத்திருப்ப து போல ஆகி விட்டது. ஆனா ல் அதில் குட்டிக் கர ணம்
போட்டு பஸ் ஸ்டாண்டில் ேதேம என்று நின்று கொண்டிருக்கும் ெபண்கைள
கவரும் முயற்சி மட்டும் ஒயவில்ைல. இது காலத்தால் மாறாதது. ெஜனடிக்
இன்ஜினியரிங் அப்படி. ஆண்டவனின் பரிணாமத் தத்துவத்திற்கு ைபக் ைவத்து
கவர்ந்து காதலித்து காப்பாற்றி இது ஒரு தொடர்… எல்லா காலத்திலும்
மாறாதது.
8. அரசியல் குறித்த பார்ைவ.
ஊழலுக்கு எதிராக, ஒரு அரசியல் மாற்றத்ைதேய இந்த இனளஞர்கள் கொண்டு
வந்தது, அரசியல் வாதிகள் எதிர்பாராத ஒன்று. அவர்கள் பார்ைவ ஐந்து
வருடங்கள் தாண்டி வியாபித்திருக்கிறது. இந்த ேதசத்திற்க்கு என்ன
ேத ைவ என்ற தீராத தா கம் அவர் க ளுக்குள்ேள ேம லும் ேம லும். அதனா ல் தா ன்
அண்ணா ஹாசாேர கூட்டம் கூட்டினால் ஆயிரக்கணக்கில் இனளஞர்கள்
திரளுகிறார்கள் சமூகத்ைத புரட்டிப் போடும் ஆங்காரம் ஓவ்வொருக்குள்ளும்
ெத ரி கிற து. ஒரு சரியா ன வடிகா ல் கிைடத்தா ல் இந்திய இனளஞர் கள் ஒரு
யுகப் புரட்சி ெசய்ய தயாராக இருக்கிறார்கள். அந்த நாள் ெநடுதூரம் இல்ைல.
ேம ம் போக்காக இந்தியா நா ங்கள் மா ணவர் களாக இருந்த து போல இல்ைல
என்பது மறுக்க முடியாத உண்ைம.
பணத்திற்கு இன்று மதிப்பில்ைல. காபி அதிக பட்சமாக இரண்டு ரூபாய்க்கு
குடித்த ஞாபகம் இருக்கிறது. இன்று நாற்பது ரூபாய் சர்வ சாதாரணமாக நீட்டி
காபி குடிக்கிறது மாணவக் கூட்டம். இைனயத்தின் இருதயமில்லாத
இரும்புக் கரங்கள் உலக ெசய்திகைள காலடியில் வந்து கொட்டுகிறது. அன்னிய
ேதசங்கள் இன்று அரசம் பட்டி போவது போல ஒரு அன்றாட நிகழ்வாகி விட்டது.
சினிமா பார்க்கும் கூட்டம் அதில் வரும் பிம்பங்கைள அன்று போல
அப்படிேய ெதய்வமாக பார்ப்பதில்ைல. (விதி விலக்கு எப்போதுேம உண்டு..)
வாரக் கைடசியில் மது அருந்த அமர்ந்தாலும், அதற்க்கு அடிைமயாகி வாழ்ைவ
தொைலப்பதில்ைல. எல்லாவற்றிலும் அளவு ெதரிந்து ைவத்திருக்கிறார்கள்
காமம் கலந்த காதல் உட்பட…. பாடி லாங்ேவஜ் ஏகத்திற்க்கும் மாற்றம்.
தெ ரியாத, புரியாத அலுவலகங்க ளி லோ சூழ லி லோ கூச்சமாக பம் முவது என்ற
ேப ச்சுக்ேக இடமில்ைல. ெந ஞ்சு நிமிர்த்தி
தன் நியாயங்கைள ைதரியமாக ேகட்கிறது இன்ைறய சமூகம்.
சில ெநருடல்கள்
இந்த மக்கள் தொைக ெபருக்கத்தில் ெவளிநாட்டிலிருந்து ெசல்வதாலோ
என்னவோ ெதரியவில்ைல சர்வீஸ் ெலவல் மட்டும் குைறந்திருப்பது
எங்கோ ெநருடுகிறது. அைடயார் ஆனந்த பவனில் ஐந்து சாப்பாடு பார்சல்
என்றால் "ச்ச்சு" என்று சூள் கொட்டுவது கொஞ்சம் மனைத
கலவரப்படுத்துகிறத்து. வீட்டு உபயோகப் பொருள் கைடயில் கூட
இரண்டு நிமிடம் கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவரின் படுக்கயைறக்குள்
நுைழந்தது போல ெடன்ஷன் ஆவது ஆக்கபூர்வமானது அல்ல.
அது போலேவ போக்குவரத்து ெநரிசைல குைறக்கும் வழி வைககள் ெசய்யாமல்
ஏற்கெனேவ இருந்த அரசு ெசய்த எைதயும் ெசய்ய மாட்டோம் என்று ெமட்ரோ
இரயிைல நிறுத்தும் அரைச நினத்தும் கவைலயாக இருக்கிறது.
என்ன ஆனால் என்ன… இந்த இைளஞ சமூகத்திடமும், அரசாங்க
சதுரங்கத்திலும், அசுர பொருளாதார வளர்ச்சியிலும், ரியல் எஸ்ேடட்
அரக்கனிலும், மாதத் தவைன கார் மற்றும் ைபக் ஆபரிலும், நவீன சினிமா
அரங்கினுலும், ஷாப்பிங் காம்ப்ளக்சிலும், அதன் கட்டாய வசீகரிப்பிலும் சிக்காமல்,
ஒரு ைமல் நடந்து ெசன்று மாநகரப் ேபரூந்து ஏறி இரண்டு மணி ேநரம் கடந்து
வீட்டுக்கு ெசல்லும் மனோ திடத்துடன், அன்றிலுருந்து இன்று வைர
மாறாதது எங்கள் சித்தப்பா மட்டும் தான். அப்பா இருந்திருந்தாலும்
இப்படித்தான் இருந்திருப்பார்.
ெச ன்ைனயின் ஒவ் வொரு ெத ருக்க ளும் நிைனவுபடுத் துவது வளர்ச்சி யோடு,
எங்கள் அப்பாைவயும் தான். இப்போதும்.

hats off to sri subramanaiyan.

I reproduce below some of my comments and that of my friend Sri Gurunathan in this regard to make the message complete.

Automatic page updates causing problems with your screen reader?


அன்புள்ள மணி,



வணக்கம்!



நலமா? உங்கள் அருமையானக் கட்டுரையைக் கண்டேன்; களிகொண்டேன். வாத்தியங்களில் உங்கள் விரல் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் உங்கள் உள்ளக் குரல் பேசுவதைக் காண்கிறேன். ந‌ம் மணி இப்படியும் கூட‌ ஒலிக்குமா, ஒளிருமா? இதுநாள்வரை தெரியாமல் போயிற்றே! 'அசத்தல்(,) மணி' என்று கூவிக் கொண்டாடத் தோன்றுகிறது. ஒரு தேர்ந்த இதழாளரின் எதார்த்தமான‌ நடை மற்றும் கூர்ந்து நோக்கி, நுட்பமாக வர்ணிக்கும் திறன் உங்கள் கட்டுரையில் காணப்படுகின்றன. மிக்க‌ மகிழ்ச்சி. இதழில் அச்சேறியிருப்பது நீங்களே திருத்தி, மாற்றி எழுதியக் கட்டுரை என்றே கருதுகிறேன். நீஙகள் தொடர்ந்து மேலும்மேலும் சிறப்பாக எழுத என் வாழ்த்துகள்.



மாற்றங்களிடையே மாறாத உங்கள் சித்தப்பாவைப் போல், என் தலைமுறையையும், எனக்கு முந்தியத் தலைமுறையையும் சார்ந்த சிலரை எனக்கும் தெரியும். மாநகரப் பேருந்திலும், சைக்கிளிலும் பயணித்துக்கொண்டு, கைபேசி வைத்துக்கொள்ளாமல் (காது சிலருக்கு மந்தம்), தொலைக்காட்சி ஏதும் பார்க்காமல் (சிலர் வீட்டில் பார்க்கவிடப்படுவதில்லை), கணினி ஒன்றும் வைத்துக்கொள்ளாமல், வலையுலகில் உலா வராமல், மின்னஞ்சல் தொடர்பில்லாமல் அவர்கள் இன்றைய உலகில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். வசதிவாய்ப்பின்மையால் அவர்கள் அப்படி இருக்கவில்லை. அவர்கள் ஜனகரைப் போன்ற ராஜரிஷிகளுமில்லை. இவைகளெல்லாம் இல்லமல் கூட‌ மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்பதால் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.



இவர்களில் சிலர் எழுவது அதிகாலையில். பிறகு, காபி, இந்து மற்றும் தினமணி. ஒன்பது மணிக்கு இரண்டாம் காபி. பதினோருமணியளவில் மதியச்சாப்பாடு. மாலை நாலு மணிக்கு டிபன் காபி. ஐந்து மணி முதல் ஏழு மணி வரை கடற்கரையிலோ, பூங்காவிலோ நண்பர்களோடு அரட்டை. அரசியல், சினிமா, சங்கீத அலசல் மற்றும் பரஸ்பர மகிழ்ச்சிகள், கவலைகள் பகிர்தல்; பரிமாறிக்கொள்ளல். எட்டு மணிக்கு இரவு உணவு. பிறகு, சிறிதுநேரம் பேரன், பேத்திகளுடன் பேசி, விளையாடி மகிழ்தல். 10.30 மணிக்கு படுக்கை. மாதத்தில் அல்லது வாரத்தில் ஒருநாள் ராயர் காபி கிளப்பிலோ, ரத்னா கபேயிலோ, கற்பகாம்பாள் மெஸ்ஸிலோ இனிப்புடன் காபி டிபன். வியாழன் வடபழனி, வெள்ளி மயிலை, சனி திருவல்லிக்கேணி என்று வழிபாடு. கல்யாணம், காட்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளுதல். சீஸ‌னில் சபா நிகழ்ச்சிகள் என்று அட்டவணையிட்டு வாழ்வது போன்ற வாழ்க்கை இவர்களுக்கு.



அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு சிலசமயம் எரிச்சல், சிலசமயம் பொறாமை ஏற்படும். குறைந்த அளவு தேவைகளோடு, எளிமையான, இனிமையான, இறுக்கமேதுமற்ற, மனநிறைவான‌ வாழ்க்கை என்று அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் என்றும் தோன்றும். 'கொடுத்து வைத்தவர்கள் அவர்கள்' என்ற பெருமூச்சு எழும். இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றும் தோன்றும்.



தட்டச்சுப் பயிற்சி நிலையங்கள் காணாமல் போனதுபோல், மூலைக்குமூலை இருந்த PCO/SDD/ISD நிலையங்கள் காணாமல் போனதையும், பெயர்பெற்ற சில திரையரங்குகள் காணாமல் போனதையும் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் பள்ளியில் படித்தக் காலத்தில் நம்மூரிலும் ஒருசில பள்ளிகளில் தட்டச்சு சொல்லித்தரப்பட்டது. ஆனால், ஐம்பது மாணவர்களுக்கு ஒர் இயந்திரம் மட்டும் இருந்ததால், அதுவும் அது அடிக்கடி பழுது அடைந்துவிடுமாதலால், ஒருசிலருக்கு மட்டுமே எப்போதவது அதில் பயில வாய்ப்புக் கிடைக்கும். எனக்கெல்லாம் அதை நெருங்கி நின்று பார்க்கின்ற வாய்ப்பு மட்டுமே பள்ளியில் படிக்கையில் கிடைத்தது.



ஒரு பதினைந்து வருட இடைவெளியில் விலைவாசி இந்தியாவில் எந்த அளவிற்கு, எந்த விகிதத்தில் உயர்ந்திருக்கிறது என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? நான் நம்மூருக்குச் செல்லும்போதெல்லாம் முதலில் கவனிப்பது இதைத்தான். கடந்த இருபத்தைந்தாண்டு கால‌‌ வளர்ச்சியின் பயன் பெரும்பாலோருக்கு கிடைக்கவில்லை. ஆனால், அதன் விளைவான விலைவாசி உயர்வு பெரும்பான்மையினரையே மிகவும் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதே பெரு வியப்புதான்! இலவச அரிசி வாங்கிச் சாப்பிட்டுச் சமாளித்து, இலவச டிவியில் நெடுந்தொடர்கள் பார்த்து தங்கள் கவலையை மறக்கிறார்கள் போலும்!



என்ன நேர்ந்தாலும், உலக உருண்டையே திசைமாறிச் சுழன்றாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம் சிங்காரச் சென்னையில் மாறாத சிலவற்றையும் கண்டிருப்பீர்கள்! மாநகரத்தின் மலக்குடலான கூவம், நடைபாதைக் குடிசைகள், குண்டுகுழிகளுடன் சாலைகள், பொது இடங்களில் அசுத்தம் செய்தல், சகட்டுமேனிக்குச் சுவரொட்டிகள் ஒட்டுதல், தொப்பை தாங்கியக் குண்டுக் காவல் துறையினர், நாளும் கனவுகளுடன், வாழ வழிதேடிக் கோயம்பேட்டில், எழும்பூரில், சென்ட்ரலில் வந்திற‌ங்கும் கிராமத்து மக்கள் கூட்டம், ஏமாற்றிப் பிழைப்போர்கள், எதையும் சகித்துக்கொண்டு, எதிர்ப்பேதுமில்லாமல், வல்லான் வகுத்த வழி வாழும் மக்கள் மற்றும் இன்னும் பல உங்கள் கண்களிலும் நிச்சயம் பட்டிருக்கும்.



'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்பது என்ன பாரதி வாக்கா? அப்படியேதும் அவன் திரவியம் தேட‌ முயன்றானா?



அப்புறம், காணி நிலம் என்பது என்ன? 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதி 'காணி நிலம் வேண்டும்' என்ற பாட்டில் பராசக்தியிடம் கேட்பது, இன்றைய நில அளவில் 23 கிரவுன்ட் அளவு நிலம். அவ்வளவு பெரிய அளவு நிலம் வேண்டும் என்று நம் இளைய தலைமுறையினர் நினைக்கிறார்கள் என்றால், அவர்களும் பாரதியைப்போல் பெரிதினும் பெரிது கேட்பவர்களாக இன்று இருக்கின்றார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது! அவ்வளவு பெரிய நிலம் வாங்கினால், அதில் வீடு (மாளிகை!) வேறு கட்ட வேண்டும். இதற்கெல்லாம் பெருந்தொகை வேண்டும். அவர்கள் எப்படியும் சம்பாதிப்பார்கள் போலும்!



இன்னொன்று. அரசாங்க வேலை வேண்டாம் என்று எண்ணுகின்ற, தனியார்துறையில் வேலை நாடுகின்ற இன்றைய‌ இளைய தலைமுறையினர்க்கிடையில், சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் முனைப்பும் உள்ளவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இன்று உள்ளனர் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். வாழ்க்கையில் துணிவுடன் முடிவுகளை எடுத்து, சவாலானச் செய‌ல்க‌ளைச் செய்து, சாதிக்க வேண்டும் என்ற‌ ம‌ன‌ப்பாங்கு இன்று பல‌ இளைஞ‌ர்க‌ளிட‌ம் காணப்படுவதும் குறிப்பிட‌த் த‌க்க‌த‌ல்ல‌வா?



ஊர்வதும், நடப்பதும் உயர்வத‌ற்காகா; ஓய்வின்றி ஓடுதலே உயர்வுக்கு வழி என்று ஓடுகின்ற இதுபோன்ற இன்றைய இளைஞர்கள் ஒருபக்கம். இருப்பதை வைத்துக்கொண்டு நிறைவோடு வாழ்கின்ற உங்கள் சித்தப்பா போன்ற மூத்தத் தலைமுறையினர் மறுபக்கம். இருசாரரும் இணைந்து வாழ்வது இன்றைய சென்னையில்!



தொடர்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன். எழுத, மீண்டும் வாழ்த்துகள்.



அன்புட‌ன்,

குருநாத‌ன்

இனிய நண்பர் குரு அவர்களுக்கு,
மணியின் ஓசை தொடர்ந்து குருவின் ஒளி.
ஒரு தரமான ஒளியும் ஒலியும் பார்த்த திருப்தி.
இந்த தேசத்தை பற்றிய இவ்வளவு ஆழ்ந்த கண்ணோட்டமும்,
இங்கே நடக்கும் மாற்றங்கள் பற்றிய இவ்வளவு தெளிவான சிந்தனையும்
இருப்பதே மனதில் மலர்ச்சி தோற்றுவிக்கும் .

ஆம், ஒரு புறம் உலகம் நிமிர்ந்து பார்க்கும் உயர்வுகள், மறுபுறம் நாமே
சரி செய்து கொள்ள பாதைகள் இருந்தும், அதை பற்றிய கவலைகள் இல்லாத மனிதர்கள்.இந்த சுதந்திர தினம் என்னை கவலையிலும், அதிசயித்தலிலும் ஒரு
சேர திக்குமுக்காட வைக்கின்றது.

பழய மற்றும் புதிய முகங்கள், மனிதர்கள், சந்ததிகள் என்று இவற்றை நான் பார்க்கவில்லை.மனித மனைகளின் பண்பு, அவர்களின் ஆசையின் அளவு கோல்கள், அவர்களின் நிம்மதி மற்றும்
மகிழ்ச்சி எதில் அடங்கி உள்ளது என்று இனம் தெரியாத தேடல்கள் என்று இவர்களின் பார்வையை நான் உள் வாங்குகின்றேன்.பழைய தலை முறை என்பது ஒரு கோயிலிலும், ஒரு நண்பனின் பேச்சிலும், ஒரு நடையோரக் கடையின் சுக்கு கஷாயத்திலும் அமைதி தேட முடியும் என்றால்,
புதிய தல முறை, எல்லாவற்றிலும் ஒரு ஆரவாரத்தையும் , ஒரு ஆடமபரத்தையும் நோக்கி பயணம் செய்கின்றதோ என்ற கவலையும் கரிசனமும் எனக்குள் உண்டு.இவற்றின் விதி விலக்குகள் நிச்சயம் உள்ளன.ஆயினும் இங்கே அந்த விதி விலக்குகள் மிக குறைவே என்ற வருத்தம் எனக்கு உண்டு.

எங்கே தவறு செய்தோம்? எவ்வாறு இதை சரி செய்வது?இதில் யாருடைய பங்கு முக்கியம் என்ற பட்டி மன்ற விவாதம் தேவை இல்லை. சென்ற தலை முறை இன்றைய தலை முறையை நண்பர்களாக் வரிக்க வேண்டும்.இன்றைய தலை முறை நேற்றய தலை முறையின் செய்திகளை அலுப்புடன் அணுகாமல் ,
அன்புடன் அலச வேண்டும.

இந்த தேசம் மிகப்பெரிய தியாகங்களின் விளை நிலம்.இன்றைய தலை முறை இந்த நாட்டின் நாளைய வித்துக்களை நயம் பட நட வேண்டும்.இன்றைய சுதந்திரத்தின் தாக்கமும், நேர்மையும் நாளைய உலகின் வழி கட்டியாக இருக்க வேண்டும்.குருவின் ஆசியும், ஆலய மணியின் ஓசையும் அதற்கு மேலும் மேலும்
பலமூட்டவேண்டும்.

அன்புடன்
சம்பத் குமார்




























No comments:

Post a Comment