உலகம் பல அனுபவங்களை நமக்கு கற்று தருகின்றது.
அவற்றில் சில அனுபவங்கள் நம்முடைய பேதமையை நன்கு காட்டு கின்றன. வேறு சில இந்த அனுபவங்கள் எனக்கு மட்டும் ஏற்பட்டது அல்ல எல்லோருக்கும் ஏற்படுபவை என்று தெளிவிக்கின்றன.இவற்றை நாம் எவ்வாறு அணுகுகின்றோம் என்பதில் நமது அமைதி அடங்கி உள்ளது.
சமிபத்தில் எனது மகளின் திருமணம் நடந்து முடிந்தது.குழந்தையாக, குமரி பெண்ணாக, பாசமுள்ள மகளாக, பார்த்து வளர்ந்த பெண் இப்போது இன்னொருவனின் மனைவி. .ஒரு குடும்பத்தின் தலைவி.ஒரு குடும்பத்தின் மறு மகள்.நேற்று வரை என்னிடம் அடம் பிடித்த மகள், இன்று மற்றோரின் வார்த்தைகளுக்கும் அவர்களின் எதிர்பர்புகளுக்கும் ஏற்ப சட்டென்று மாறி விட்டது எப்படி என்பது புரியாத புதிர்.
நேற்று வரை போர்வைக்குள் கையும் காலும் சுருட்டி கொண்டு காலை பத்து மணி வரை அசதியுடன் துங்கிய திரு மகள், இன்று அதிகாலையில் எழுந்து தனக்கும் தன கணவருக்கும், சமையல் முடித்து , வீடு பெருக்கி, அலங்காரம் முடித்து, அலுவலகத்துக்கு காலை எட்டு மணிக்கே சென்று விட்டு,இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் வந்து கணவனின் தேவைக்கும் ருசிக்கும் ஏற்ப உணவு செய்து தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அந்த உணவை தானும் உண்டு மகிழ்வது எப்படி என்பது ஒரு அதிசயம்.
திருமண பந்தம் என்பது ஆண் பெண் இரு பாலருக்கும் சில சில விதிகளை எழுத படாத விதிகளை நிறுவுகின்றது. ஆயினும் ஒரு பெண் கடைபிடிப்பது போல் ஒரு ஆண் அந்த விதிகளை கடை பிடிப்பது என்பது பெரும்பாலும் நிகழ்வதில்லை.பாரதி சொன்னது போல் ஒரு ஆணின் ஒழுக்கமும் உயர்வும் ஒரு பெண்ணை சார்ந்தே நிகழ்கின்றது.இன்றைய கால கட்டத்தில் சில சில விதிக்கு அப்பாற்பட்ட பெண்களும் ஆண்களும் காண முடியும்.அவை இன்னும் என் மகளின் பெருமையை உணர்த்தும் படிகளாகவே உள்ளன.
ஒரு களத்தில் பெண் படிக்காதது பெரிய சௌகரியம் என்றும் அதனால் தான் அவளை ஆண்டு அனுபவிக்க முடியும் என்ற எண்ணமும் பரவலாக இருந்தது.ஆனால் இன்றைய கால காட்டத்தில் ஆணுக்கு இணையாக இன்னும் சொல்ல போனால் அதற்கும் மேலாக படித்து விட்டு, அவனுக்கு இணையாக வேலையும் அவனைவிட அதிகமாக் சமபளமும் வாங்கி கொண்டு, அதே சமயம் கணவனின் மனதிற்கு உகந்த வகையில் ஒரு நல்ல மனைவி ஆகவும் அமைவது என்பது .....கண்ணதாசனின் வரிகளில் சொல்லப்போனால் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"" என்பதை மெய்ப்பிகின்றது.
அன்று என் மகளின் அன்பு கட்டளைக்கு இணங்க அவள் வீட்டில் உணவு அருந்த சென்று இருந்தேன்.மேற் சொன்ன எல்லா எண்ணங்களும் என் மனதில் அப்போது தோன்றியவை.உள்ளே நுழைந்தவுடன் இட்லி,வடை , பொங்கல் சட்னி, சாம்பார் என்று காலை டிபனில் இருந்து தொடங்கி மதியம் உணவுக்கு சாம்பார்(அவள் கணவனுக்காக)வத்தல் குழம்பு மற்றும் மோர் குழம்பு(எனக்காக) , ரசம், பாயசம் ,காய் , கூட்டு என்று அலுக்காமல் சலிக்காமல், அவளுக்கு இருந்த ஒரே ஒரு விடுமுறை நாளிலும் பார்த்து பார்த்து உபசரித்த விதம், என்னுள் ஒரு கர்வத்தை ஏற்படுத்தியது.இவள் என் மகள், இவள் என் பெயரை மட்டும் இன்றி தன கணவனின் காரியம் யாவிலும் கை கொடுப்பாள் என்ற நம்பிக்கை மேலும் வலுத்தது.இவளி இவ்வாறு வளர்த்த என் மனைவியின் மேல் இன்னும் அபிமானம் கூடியது.இவளின் பெருமை உணர்ந்து இவளை தான் திருமணம் செய்யவேண்டும் என்று தன பெற்றோரின் ஒப்புதல் வாங்கிய என் மாப்பிளையின் பேரில் மீண்டும் ஒரு மரியாதை கூடியது.
நல்லதோர் வீணை இவள் , இவள் நலம் மேலும் இவள் கணவனால் காக்க படும் என்ற எண்ணம் எனது அடி மனதில் ஒரு இனம் தெரியாத ஆனந்தமும் அமைதியும் ஏற்பட வழி வகுத்தது.
ஒரு செல்ல மகள் ஒரு குடும்ப விளக்காக மிளிரும் இந்த கணத்தில். அவளுக்கு பதினாறு சீர்களும், எல்லோரின் ஆசிகளும் இடைவிடாது கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறையிடத்தில் இந்த புனித ஆடி வெள்ளி அன்று என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள் ,
நேசத்துடன்.நெகிழ்வுகளுடன்
ஒரு பாச தந்தை
arpudhamaana thoguppu yendru dhaal solluveen :)
ReplyDeleteHi,
ReplyDeleteunakku pidikkum endru ninaiththen
We the birds of the same feather flocktogether,
is it not:):)